நெய்வேலி : நெய்வேலி நகரில் தி.மு.க., வினர் சைக்கிளில் ஊர்வலமாக சென்று தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர்.
கடலுார் மேற்கு மாவட்டச் செயலர் கணேசன் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில், பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தொ.மு.ச., பொருளாளர் குருநாதன், மாவட்ட பொறியாளர் அணி கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி சார்லஸ், இளைஞர் அணி நகர அமைப்பாளர் ஸ்டாலின், கீழூர் அவைத் தலைவர் ராஜ்குமார், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ஆனந்தஜோதி, நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நன்மாறபாண்டியன், சந்திரசேகரன், மதியழகன், இளங்கோ, செந்தில்குமார், மணிவண்ணன், ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் சைக்கிள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE