பெண்கள் ஆடை மாற்றுவதை படம் படித்தவர் கைது

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திலக்நகர் : பெண்கள் உடை மாற்றுவதை திருட்டுத்தனமாக, மொபைல் போனில் பதிவு செய்து, வீட்டில் பார்த்து வந்த, 'லேப் டெக்னிஷியன்' கைது செய்யப்பட்டார். சித்ரதுர்காவை சேர்ந்த, மாலதேஷ், 30, பெங்களூரு திலக்நகரில் வசிக்கிறார். ஜெயநகர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில், லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். அறுவை சிகிச்சை அறையிலேயே, அதிக நேரம் இருக்கும் இவர், அதன் அருகிலுள்ள பெண்கள்

திலக்நகர் : பெண்கள் உடை மாற்றுவதை திருட்டுத்தனமாக, மொபைல் போனில் பதிவு செய்து, வீட்டில் பார்த்து வந்த, 'லேப் டெக்னிஷியன்' கைது செய்யப்பட்டார்.

சித்ரதுர்காவை சேர்ந்த, மாலதேஷ், 30, பெங்களூரு திலக்நகரில் வசிக்கிறார். ஜெயநகர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில், லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். அறுவை சிகிச்சை அறையிலேயே, அதிக நேரம் இருக்கும் இவர், அதன் அருகிலுள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில், தன் மொபைல் போனை, 'சார்ஜ்' செய்வது போல வைத்து, கேமராவை, 'ஆன்' செய்து வைத்திருப்பார். எக்ஸ்ரே எடுக்க வரும் பெண்கள், உடை மாற்றும் காட்சிகள், அந்த மொபைலில் பதிவாகும். இதை வீட்டுக்கு எடுத்து சென்று, பார்த்து ரசிப்பார். சில நாட்களுக்கு முன், உடை மாற்ற வந்த பெண் ஊழியர் ஒருவர், சார்ஜிங் போடப்பட்டிருந்த மாலதேஷின் மொபைலில், கேமரா ஆனில் இருப்பதை கவனித்தார்.

அதை பரிசோதித்த போது, பல பெண் ஊழியர்கள், உடை மாற்றும் வீடியோக்கள் இருப்பது தெரிந்தது. உடனடியாக, மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு, இதை கொண்டு சென்றார். மருத்துவமனை அதிகாரிகள், திலக்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். மாலதேஷ் கைது செய்யப்பட்டார். மொபைல் போனில் பதிவான காட்சிகளை பார்த்து ரசித்ததை தவிர, வேறு யாருக்கும் அனுப்பவில்லை என, மாலதேஷ், விசாரணையில் தெரிவித்தார். அவரது மொபைல் போனை, போலீசார் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X