சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முழுநேர ஊழியராக்கக் கோரி மறியல் கடலுாரில் சத்துணவு ஊழியர்கள் கைது

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கடலுார் : முழுநேர ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, கடலுாரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக்கி, முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலர் மற்றும்

கடலுார் : முழுநேர ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, கடலுாரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக்கி, முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாநில அளவில் பெண்கள் தலைமையில் கருப்பு உடையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடலுார் மாவட்ட மையம் சார்பில், பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நல்லுார் ஒன்றிய செயலாளர் கற்பகம் தலைமையில் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் செல்லவேல், ரவிக்குமார், கருணாகரன், வெற்றிமணி மற்றும் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, ஆதரவாக பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசினர்.அதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X