மைசூரு : கொரோனா தொற்று அதிகமுள்ள கேரளாவிலிருந்து, மைசூருக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியரால், பீதி எழுந்துள்ளது.
மைசூரு நகர மக்கள் அலட்சியமாக இருப்பதாலும், மாவட்ட நிர்வாகத்துக்கு தலைவலி எழுந்துள்ளது.சீனாவிலிருந்து கொரோனா, கர்நாடகாவில் கால் வைத்த போது, மைசூரு நகர், கடும் நெருக்கடியை சந்தித்தது. ஜூபிலியன்ட் தொழிற்சாலை ஊழியர்களால், கொரோனா வேகமாக பரவியது.அப்போது, மைசூரு நகர மக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். முக கவசம் அணிவது; சமூக விலகலை பின்பற்றுவது; கிருமி நாசினி பயன்படுத்துவது போன்ற, அரசின் விதிமுறைகளை பின்பற்றினர்.கொரோனா பீதி ஓரளவு குறைந்தவுடன், விதிமுறைகளை மறந்தனர். சமூக விலகலை பின்பற்றாமல், முக கவசம் அணியாமல் நடமாடுகின்றனர்.
மார்க்கெட்டுகள், கடைகள், நிகழ்ச்சிகளில் கூட்டமாக சேருகின்றனர். மைசூரில் இரண்டாவது அலை எழுந்துள்ள நிலையில், மக்களின் அலட்சியமே, மைசூருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.மைசூரில் அரண்மனை, சாமுண்டி மலை, மிருகக்காட்சி சாலை உட்பட, பெரும்பாலான சுற்றுலா தலங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்குக்கு பின், இப்போதுதான், இந்த இடங்கள் களை கட்ட துவங்கியது. சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இதுவே, மைசூரு நகருக்கு, பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நகரும் கூட, 'டேஞ்சர் ஜோனில்' சிக்கும் வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE