ரயில் நிலையத்தில் சிறுவர்கள் மீட்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு : மனிதர்கள் கடத்தலை தடுக்கும் வகையில், 'நன்ன பரிஸ்டே' திட்டத்தின் கீழ், பெங்களூரு மண்டலத்தின் இரு ரயில் நிலையங்களில், இளம் பெண், ஐந்து சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர். ரயில் நிலையங்கள், ரயில்களில் ஆதரவின்றி தவிப்பவர்கள், தஞ்சம் புகுந்தவர்களை மீட்பதற்காக, 2018 ஜூலையில், 'நன்ன பரிஸ்டே' என்ற, சின்ன தேவதைகள் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இதன்

பெங்களூரு : மனிதர்கள் கடத்தலை தடுக்கும் வகையில், 'நன்ன பரிஸ்டே' திட்டத்தின் கீழ், பெங்களூரு மண்டலத்தின் இரு ரயில் நிலையங்களில், இளம் பெண், ஐந்து சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

ரயில் நிலையங்கள், ரயில்களில் ஆதரவின்றி தவிப்பவர்கள், தஞ்சம் புகுந்தவர்களை மீட்பதற்காக, 2018 ஜூலையில், 'நன்ன பரிஸ்டே' என்ற, சின்ன தேவதைகள் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இதன் மூலம், இதுவரை, 3,012 குழந்தைகள் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இது போல, பிப். 19, 20ல் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வு பணியில் இருந்தனர். அப்போது, எலஹங்கா ரயில் நிலையத்தில், இரு ஆண்களுடன் இளம்பெண், மிரட்சியுடன் காணப்பட்டார்.

உடனடியாக, பாதுகாப்பு படையினர், இளம் பெண்ணிடம் கேட்ட போது, அவர், ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவை சேர்ந்தவர் என்றும், ஒரு மாதத்துக்கு முன், பெங்களூரு கடத்தி வந்து, லாட்ஜில் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, அவரை கடத்தி வந்த இருவரையும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, பில்வாரா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பெங்களூரு கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா சிட்டி ரயில் நிலையத்தில், ஐந்து சிறுவர்கள் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த, ரயில்வே பாதுகாப்பு படையினர், அவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது சிறுவர்கள், நாங்கள், நான்கு பேர், பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர், திரிபுராவை சேர்ந்தவர் என்றும், வலுக்கட்டாயமாக, வேலை வாங்கி வந்ததால், சொந்த ஊருக்கு செல்ல, தப்பி வந்ததாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து, ஐந்து சிறுவர்களும், அவர்களின் பெற்றோர் வரும் வரை, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X