சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு கொடுமை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மாமியார் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் ரவீந்திரன்,30. இவரது மனைவி சுஷ்மா,22; இவர்களுக்கு கடந்த 2020, ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடந்தது. பெற்றோர் இல்லாததால் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த சுஷ்மாவின்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மாமியார் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் ரவீந்திரன்,30. இவரது மனைவி சுஷ்மா,22; இவர்களுக்கு கடந்த 2020, ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடந்தது. பெற்றோர் இல்லாததால் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த சுஷ்மாவின் திருமணத்திற்கு வரதட்சணையாக 7 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கினர்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, தந்தை பெயரில் உள்ள நிலத்தை வரதட்சணையாக வாங்கிவரும்படி வற்புறுத்தி, சுஷ்மாவை வீட்டில் அடைத்து வைத்து கணவர் ரவீந்திரன் சித்ரவதை செய்துள்ளார். ரவீந்திரனின் தந்தை ராமர், தாய் பச்சையம்மாள், சித்திகள் தேவகி, கொளஞ்சி ஆகியோரும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்தனர்.கடந்த 7ம் தேதி சுஷ்மாவிடம் நிலத்தை எழுதி வாங்கி வராவிட்டால், ரவீந்திரனுக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிடுவோம் என, மிரட்டி வீட்டைவிட்டு துரத்தினர்.

இதுகுறித்து சுஷ்மா கொடுத்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் புனவேஸ்வரி வழக்குப் பதிந்து, ரவீந்திரனை கைது செய்தார். ராமர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X