சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் ரவுடி கொலை வழக்கு மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கடலுார் ரவுடி வீரா கொலை வழக்கில் மேலும் இருவர், நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா(எ) வீரங்கன், 35; ரவுடி. இவரை, கடந்த 16ம் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக தலையை துண்டித்து படுகொலை செய்தது.இச்சம்பவத்தில் தொடர்புடைய திருப்பாதிரிப்புலியூர்,

விழுப்புரம் : கடலுார் ரவுடி வீரா கொலை வழக்கில் மேலும் இருவர், நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா(எ) வீரங்கன், 35; ரவுடி. இவரை, கடந்த 16ம் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக தலையை துண்டித்து படுகொலை செய்தது.இச்சம்பவத்தில் தொடர்புடைய திருப்பாதிரிப்புலியூர், மார்க்கெட் காலனியைச் சேர்ந்த அருண்பாண்டியன், சுதாகர், ரமணன், ராஜசேகர் ஆகியோரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கிருஷ்ணன், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக, கடலுார் குப்பன்குளம், சி.எம்.சி., காலனியைச்சேர்ந்த சாமிநாதன், ஸ்டீபன்ராஜ், ஜீவா ஆகியோர் கடந்த 19ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வழக்கில் மேலும் இருவரை போலீசார் தேடிவந்தனர்.இதனை அறிந்த கடலுார், குப்பன்குளம், சி.எம்.சி., காலனியைச் சேர்ந்த ராஜா மகன்கள் விக்ரம்,27; ராக்கி,25; ஆகிய இருவரும், விழுப்புரம் மாஜிஸ்திரேட் அருண்குமார் முன் சரணடைந்தனர்.

இருவரையும் நாளை 25ம் தேதி வரை சிறையில் அடைக்கவும், இதுகுறித்து கடலுார் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார். இருவரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X