பெல்லந்துார் : பெங்களூரு பெல்லந்துார், 'எஸ்.ஜே.ஆர்., வாட்டர்மார்க்' அடுக்கு மாடி குடியிருப்பில், கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்ததால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
பெங்களூரு, பெல்லந்துாரில் உள்ள, 'எஸ்.ஜே.ஆர்., வாட்டர்மார்க்' அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், உள்ள, ஒன்பது பிளாக்குகளில், 504 பிளாட்கள் உள்ளன. 470 பிளாட்களில், 1,000 பேர் வசிக்கின்றனர்; மீதி பிளாட்கள் காலியாக உள்ளன.இதில், திடீரென சிலருக்கு, காய்ச்சல், சளி, இருமல் காணப்பட்டது. அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், 10 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது. அவர்கள் தங்கியிருந்த, ஆறு பிளாக்குகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம், 501 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மேலும், 10 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது.
இதன் மூலம், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மீண்டும், 554 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், செக்யூரிட்டிகள், வீட்டு வேலைக்காரர்களும் அடங்குவர். இவர்களின் முடிவுகள் இன்று வரும். இதனால், தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE