சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது லாரி மோதல் 2 மாணவர்கள் பலி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற மாணவர்கள் இருவர் இறந்தனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா,17; பிரகாஷ் மகன் பிரவீன்குமார்,17. இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு, ஜெயசூர்யா, பிரவீன்குமாருடன் பெண்ணாடம்,

திட்டக்குடி : திட்டக்குடி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற மாணவர்கள் இருவர் இறந்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா,17; பிரகாஷ் மகன் பிரவீன்குமார்,17. இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு, ஜெயசூர்யா, பிரவீன்குமாருடன் பெண்ணாடம், திட்டக்குடி சாலையில், ஹீரோஹோண்டா பைக்கில் வந்தார்.கூடலூர் அருகே வந்தபோது, எதிரில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயசூர்யா அதே இடத்தில் இறந்தார்.

காயமடைந்த பிரவீன்குமார், சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X