சித்ரதுர்கா : பீம சமுத்ரா கிராமத்திலிருந்து, பாக்கு மூடைகளுடன், டில்லி சென்ற லாரியை, கடத்திய நான்கு கொள்ளையர்களை, கைது செய்த போலீசார், 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாக்கு மூடைகளை, பறிமுதல் செய்தனர்.
சித்ரதுர்கா நகர், பீம சமுத்ரா கிராமத்தின், ஸ்ரீரங்கநாதா டிரேடர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, 340 பாக்கு மூடைகளை ஏற்றிக்கொண்டு, ஜன., 5ல் டில்லிக்கு லாரி புறப்பட்டது.இதை பின் தொடர்ந்து சென்ற, 12 பேர் கொண்ட கும்பல், பல்லாரி மாவட்டம், கூட்லகி தாலுகா அருகிலுள்ள, தேசிய நெடுஞ்சாலையில் வழி மறித்தனர்.ஓட்டுனர் பூப்சிங் யாதவ் கண்களில் மிளகாய் பொடி துாவி தாக்கிவிட்டு, லாரியை கடத்தினர். ஹூப்பள்ளி தடசா திருப்பத்தின் அருகில், கீழே இறக்கிவிட்டு தப்பியோடினர்.டிரேடர்ஸ் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், மாண்டியா மாவட்டம், பெள்ளூர் கிராஸ் அருகில், லாரியை கண்டுப்பிடித்தனர்.
அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ரிஸ்வான், லிங்கராஜூ, சல்மான், அஷ்ரப் ஆகியோரை கைது செய்தனர். 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாக்கு மூடைகள், பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையில் தொடர்பு கொண்டு, தலைமறைவானவர்கள், தேடப்பட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE