சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் தொழிலாளி கைது

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் அருகே நான்கு வயது சிறுமியிடம், பாலியல் முயற்சியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளியை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்,47; கூலி தொழிலாளி. இவர், கடந்த 16ம் தேதி மதியம் 1:00 மணிக்கு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், வெயிலில் விளையாட வேண்டாம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே நான்கு வயது சிறுமியிடம், பாலியல் முயற்சியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளியை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்,47; கூலி தொழிலாளி. இவர், கடந்த 16ம் தேதி மதியம் 1:00 மணிக்கு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், வெயிலில் விளையாட வேண்டாம் எனக்கூறி, தனது வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.சற்று நேரத்தில் சேகரின் வீட்டிற்குள் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டது. சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சிறுமியிடம் சேகர் பாலியல் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் நேற்று திண்டிவனம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து சேகரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X