பெங்களூரு : 'பொகரு' திரைப்படத்தில், பிராமணர் சமுதாயத்தை, அவமதிக்கும் காட்சியை, பா.ஜ., - எம்.பி., ஷோபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.நடிகர் அர்ஜுன் உறவினரான, நடிகர் துருவா சர்ஜா நடிப்பில், 'பொகரு' திரைப்படம், சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.இத்திரைப்படத்தில், பிராமண சமுதாயத்தை அவமதிக்கும் வகையில், காட்சி இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. விவாதத்துக்குரிய காட்சியை நீக்கும்படி வலியுறுத்துகின்றனர். கலபுரகி சர்தார் வல்லபாய் படேல் சதுக்கத்தில், மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.அவர்கள் கூறுகையில், 'படத்தை இயக்கிய நந்தகிஷோர் மற்றும் அலட்சியமாக இருந்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.
இது தொடர்பாக, பா.ஜ., - எம்.பி., ஷோபா, நேற்று கூறியதாவது:'பொகரு' திரைப்படத்தில், பிராமணர் சமுதாயத்தை அவமதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளன. தற்போது ஹிந்துக்களை அவமதிப்பது, பேஷனாகிவிட்டது. ஹிந்துக்களின் உணர்வுகள் மீது, சவாரி செய்கின்றனர். இது போன்று வேறு மதங்கள் பற்றி, படம்பிடிக்கும் தைரியம் உள்ளதா.இத்திரைப்படத்தில், விவாதத்துக்குரிய காட்சிகளை, உடனடியாக அகற்ற வேண்டும். அதுவரை படம் திரையிடுவதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.படத்தின் இயக்குனர் நந்த கிஷோர் கூறுகையில், ''படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை, நீக்குவோம். பிராமணர் சமுதாயத்துக்கு, வருத்தம் வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE