கடலுார் : கடலுாரில் விபசாரத்தில் ஈடுபட்ட ௧௦ பேர் போலீசாரிடம் சிக்கினர். கடலுார், கோண்டூர் சுப்புலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு, 20 வயது மதிக்கத்தக்க இரு பெண்களும், மூன்று ஆண்களும் இருந்தனர். அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. அதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், அவர்கள், புதுச்சேரி வில்லியனுார் ராமச்சந்திரன், 59; விழுப்புரம் மாவட்டம் கோலியனுார் ராமலிங்கம், 33; புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண், கொல்கத்தாவை சேர்ந்த 20 வயது பெண் என்பதும், கடலுார் சூரப்பநாயக்கன்சாவடியை சேர்ந்த ராஜேஷ், 40; புரோக்கராக செயல்பட்டதும் தெரியவந்தது.
ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, கடலுார் வரவழைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். 2 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.லாட்ஜில் விபசாரம்கடலுார் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள லாட்ஜில் விபசாரம் நடப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தியதில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரிந்தது
.உடன், 3 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.விபசாரம் நடத்த அடைக்கலம் கொடுத்த லாட்ஜ் உரிமையாளரான பெண் உட்பட 2 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE