மெட்ரோ இரும்பு திருட்டு அதிகாரிகள் கவலை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு : மெட்ரோ ரயில் பணிகளுக்கு வைக்கப்பட்ட இரும்பு பொருட்கள், இரவோடு இரவாக திருடு போவது, மெட்ரோ அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் பல இடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. பையப்பனஹள்ளி, மஹாதேவபுரா, ராமமூர்த்தி நகர் பகுதிகளில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக, தேவையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இரு சக்கர வாகனத்தில் வரும்

பெங்களூரு : மெட்ரோ ரயில் பணிகளுக்கு வைக்கப்பட்ட இரும்பு பொருட்கள், இரவோடு இரவாக திருடு போவது, மெட்ரோ அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் பல இடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. பையப்பனஹள்ளி, மஹாதேவபுரா, ராமமூர்த்தி நகர் பகுதிகளில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக, தேவையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இரு சக்கர வாகனத்தில் வரும் மர்மநபர்கள், பாதுகாப்பு ஊழியர்களின் கண்களில் மண்ணைத்துாவி, இரும்பு பொருட்களை திருடிச் செல்கின்றனர். இக்காட்சி கண்காணிப்பு கேமராக்களில், பதிவாகியுள்ளது.ஒரே மாதத்தில், 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பொருட்கள் திருட்டு போனது.

மதுபானம், பீடி, சிகரெட் செலவுக்காக, இந்நபர்கள் திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அந்தந்த பகுதி காவல் நிலையங்களில், மெட்ரோ ஊழியர்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தியும், திருடர்களை பிடிக்க முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X