சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தகராறில் முதியவர் கற்களால் அடித்து கொலை: 3 பேர் கைது

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் நிலத்தகராறில் முதியவரை அடித்து கொலை செய்த 3 பேரை கரியாலுார் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சடையன் 85. இவருக்கு சொந்தமாக அருகில் உள்ள துரூர் கிராமத்தில் நிலம் உள்ளது.அதில் 60 சென்ட் நிலத்தை துரூர் கிராம பொது மக்கள் கரியராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் நிலத்தகராறில் முதியவரை அடித்து கொலை செய்த 3 பேரை கரியாலுார் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சடையன் 85. இவருக்கு சொந்தமாக அருகில் உள்ள துரூர் கிராமத்தில் நிலம் உள்ளது.அதில் 60 சென்ட் நிலத்தை துரூர் கிராம பொது மக்கள் கரியராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார்.அந்த நிலத்திற்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை சடையன் மற்றும் அவரதுமகன்கள் அனுபவித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சடையன் அனுபவத்தில் இருந்துவந்த புறம்போக்கு நிலத்தை துரூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, மூர்த்தியான், சின்னையன் உள்ளிட்டோர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சமன் செய்தனர்.

இதனை சடையன் மற்றும் அவரது மகன் ஆசைத்தம்பி ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். புறம்போக்கு இடம் அதனால் எங்களுக்குதான் சொந்தம் எனகூறி வாக்குவாதம் செய்தனர்.இதில் ஆத்திரமடைந்த துரூரைச் சேர்ந்த 3 பேரும் சடையன் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோரை கற்களால் கடுமையாகதாக்கியுள்ளனர்.இதில் சடையன் மயங்கி விழுந்தார். உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சடையனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து துரூர் கிராமத்தை சேர்ந்த கோவில்பிச்சை மகன் பழனி 30, கருப்பன் மகன் மூர்த்தியான் 27, சின்னையன் 65, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X