மைசூரு : 'நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஆழ்துளை கிணறு தோண்ட, அனுமதி பெறுவது கட்டாயம். நகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்துகளிடம், அனுமதி கடிதம் பெற வேண்டும்' என, மைசூரு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்துாரி, நேற்று கூறியதாவது:மைசூரு மாவட்டத்தில் நிலத்தடி நீரை, அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டுமானால், உள்ளாட்சி அல்லது கிராம பஞ்சாயத்துகளிடம், அனுமதி பெறுவது கட்டாயம்.ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு, 15 நாட்களுக்கு முன், வீட்டுமனை, நிலத்தின் உரிமையாளர்கள், ஆழ்துளை தோண்டும் ஒப்பந்தராரர்கள், உள்ளாட்சி அல்லது கிராம பஞ்சாயத்துகளிடம், தகவல் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே, ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும்.கோடை காலம் துவங்குவதால், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.
கர்நாடக நிலத்தடி வாரியத்தில், பதிவு செய்து உரிமம் வைத்துள்ள இயந்திரங்களை மட்டுமே, ஆழ்துளை கிணறு தோண்ட பயன்படுத்த வேண்டும்.ஒருவேளை தண்ணீர் கிடைக்காவிட்டால், உடனடியாக அதை மூடி, அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு நில உரிமையாளர், ஆழ்துளை கிணறு தோண்டிய ஒப்பந்ததாரரே, பொறுப்பாளியாக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE