தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை; உதயநிதிக்கு எதிராக குஷ்பு: பா.ஜ., பலே பிளான்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (152)
Share
Advertisement
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில் நிற்க விரும்பினார், அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனால், அவருக்கு சென்னையில் தொகுதி ஒதுக்க, திட்டம் போட்டிருக்கிறது, கமலாலயம். கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுவார் என்று கூறப்படும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க, குஷ்பு சம்மதம் சொல்லி விட்டார்.
kushboo, annamalai, BJP, TN election

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில் நிற்க விரும்பினார், அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனால், அவருக்கு சென்னையில் தொகுதி ஒதுக்க, திட்டம் போட்டிருக்கிறது, கமலாலயம். கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுவார் என்று கூறப்படும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க, குஷ்பு சம்மதம் சொல்லி விட்டார். இதனால் மிரண்டு, உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஓடினால், அங்கே, 'செக்' வைக்க, நடிகை காயத்ரி ரகுராமை ரெடியாக இருக்க சொல்லி விட்டது மேலிடம்.

ஹிந்து எதிர்ப்பு கொள்கையை கைவிட மறுக்கும், தி.மு.க.,வை பிரதான எதிரியாக பா.ஜ., கருதுவதால், அக்கட்சிக்கு எதிராக ஹிந்து ஓட்டுகளை ஒருமுனைப் படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. 'அந்த வகையில், ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்துகிறோம்.


latest tamil news



சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கல்வியறிவு பெற போராடி, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி , ஐ.பி.எஸ்., அதிகாரியாகி, நிர்வாகத் திறமையை நிரூபித்த இளைஞரை முன்னிறுத்தினால், எதிரே நிற்கும் ஸ்டாலினின் பலவீனங்கள் பட்டவர்த்தனமாக மக்களுக்கு தெரியும்' என, ஒரு நிர்வாகி குறிப்பிட்டார்.

அதே போல, 'குஷ்பு அல்லது காயத்ரியால், தி.மு.க.,வின் குடும்ப அரசியல், குறுநில மன்னர்கள் ஆதிக்கம், பெண்களை கொச்சையாக விமர்சிப்பது, பெண் தெய்வங்களை கேலி செய்வது போன்ற விஷயங்களை, பெண்களின் மனதில் பதியும் விதமாக பிரசாரம் செய்ய முடியும். அதற்கு நிச்சயம் பலன் இருக்கும்' என்றார் அவர்.

Advertisement




வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendiran - London,யுனைடெட் கிங்டம்
03-மார்-202101:29:23 IST Report Abuse
Rajendiran nothing will happen, Raja, who is Annamalai?
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
25-பிப்-202116:34:47 IST Report Abuse
periasamy ஸ்டாலினை எதிர்த்து மீண்டும் உயிர்த்தெழுந்து எம்ஜிஆர்/ ஜெயலலிதாவே வந்து போட்டிட்டாலும் தோல்விதான் எப்படியோ அவரின் வெற்றியை மிக மிக எளிதாக்கிய பாஜகவிற்கு நன்றி
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
25-பிப்-202116:26:29 IST Report Abuse
periasamy பாஜாகாவின் முடிவு அவர்கள் கொள்கை சார்ந்த முடிவு வரவேற்கிறேன் இருந்தாலும் திரு ஸ்டாலின, உதயநிதிவெற்றியை பாஜக எளிதாகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X