எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுடன் மோதலா: குண்டுராவ் மறுப்பு

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
''தி.மு.க., - காங்., கூட்டணி ஒற்றுமையாகவே உள்ளது. கூட்டணி பேச்சுக்கு பின், ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் பிரசாரம் மேற்கொள்வார்,'' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசுக்கு, குறைவான தொகுதிகளை கொடுக்க முன்வந்தால் காங்கிரஸ் அதை ஏற்குமா?25ம் தேதி
திமுக, தி.மு.க., காங்கிரஸ், காங், குண்டுராவ், ஸ்டாலின், ராகுல், ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், புதுச்சேரி,

''தி.மு.க., - காங்., கூட்டணி ஒற்றுமையாகவே உள்ளது. கூட்டணி பேச்சுக்கு பின், ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் பிரசாரம் மேற்கொள்வார்,'' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசுக்கு, குறைவான தொகுதிகளை கொடுக்க முன்வந்தால் காங்கிரஸ் அதை ஏற்குமா?

25ம் தேதி தான் கூட்டணி பேச்சு நடத்துகிறோம்.


தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் குழுவில், வழக்கமாக இடம் பெறும் வீரப்ப மொய்லி, இம்முறை இடம் பெறவில்லையே...?

அவர் காங்கிரசின் மூத்த தலைவர். அவர் ஆலோசனை பெற்று தான், கூட்டணி பேச்சு நடத்துகிறோம்.


தி.மு.க., தான் திட்டமிட்டு, அவரை குழுவில் இடம் பெற விடாமல் செய்து விட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து...?

யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.


புதுச்சேரியில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் திடுமென பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணி என்ன?

கர்நாடகா, கோவா, மத்திய பிரதேசம், என பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிகளை கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்தது. அது போன்று தான், புதுச்சேரியிலும் எம்.எல்.ஏ.,க்களை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை காட்டி மிரட்டி உள்ளது.இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது.


புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கான காரணம்,- சரியான தலைமைஇல்லாததா?

அப்படி இல்லை. அனுபவம் மிக்க தலைவர்கள் இருந்தனர். பா.ஜ.,வினர் சூழ்ச்சி செய்து, ஆட்சியை கவிழ்த்தனர்.


தமிழக பிரசாரத்துக்காக வரும் ராகுல், மரியாதை நிமித்தமாகக் கூட கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்கவில்லையே...?

இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை.கூட்டணி பேச்சுக்கு பின் இருவரும் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வர்.


தி.மு.க., தரப்பும், ராகுலை சந்திக்க விருப்பப்படாதது போல தெரிகிறது. கூட்டணியில் இணக்கம் இல்லையா?


ஒற்றுமையாக தான் உள்ளோம் என, ராகுலும், ஸ்டாலினும் கூறியுள்ளனரே.


தி.மு.க., தரப்பில், காங்கிரசுக்கு, 20 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் விட்டுக் கொடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இது சரியா?

இன்னும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. அதற்குள் தொகுதி பங்கீடு எப்படி முடியும்.


தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் தி.மு.க.,வை சார்ந்தே இயங்குவதாலேயே, அக்கட்சி தமிழகத்தில் வளரவில்லை என சொல்கின்றனரே?

அப்படி எல்லாம் இல்லை. காங்கிரஸ் தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்துள்ளது.


காந்தி சிலை விவகாரத்தில், காங்., -- எம்.பி., ஜோதிமணி கரூரில் மிகப் பெரிய நாடகத்தை நடத்தி விட்டார் என, எதிர் தரப்பில் விமர்சிக்கின்றனரே?

காந்தி சிலை நிறுவியது நாங்கள். ஆனால், ஒரு பெண் எம்.பி.,யை அவமானப்படுத்தும் வகையில் அராஜகம் மற்றும் அடக்குமுறையை, அ.தி.மு.க., அரசு கையாண்டது. இது கண்டிக்கத்தக்கது.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Bengaluru,இந்தியா
24-பிப்-202113:52:58 IST Report Abuse
Krishnan மடியில் கனமிருந்தால்தானே வழிக்கு பயம். பாண்டிச்சேரிஐ சார்ந்த Congress தலைவர்கள் மத்திய அரசின் நீதித்துறையை கண்டு ஏன் பயப்படவேண்டும்?
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
24-பிப்-202109:03:03 IST Report Abuse
Balasubramanian Ramanathan இப்படியே களநிலவரம் தெரியாமல் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என கூறிக்கொண்டு இருந்தால் விரைவில் காங்கிரஸுக்கும் சிலை வைத்துவிடுவீர்கள். நீங்கள் கூறுவதுபோல் அமித் ஷா ஏற்பாடு என்றால் ஆதாரத்தை வெளியிட்டு அவரை நாற அடியுங்கள். இல்லையென்றால் நீங்கள் நாறிவிடுவீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X