பொது செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பில் குழப்பம்: நிதி ஒதுக்கீடு செய்ததாக எந்த தகவலும் இல்லை

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான நகரமாக, கோவையை மத்திய அரசு தேர்வு செய்து, 10 ஆண்டுகளாகியும், ஒரு கோடி ரூபாய் கூட நிதி ஒதுக்காத தமிழக அரசு, கடைசி நேரத்திலும் ஒரு குழப்பமான அறிவிப்பையே வெளியிட்டுள்ளது.இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை நகரங்களில், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 19 நகரங்களை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தகுதியான
கோவை,  மெட்ரோ ரயில், திட்ட அறிவிப்பு, குழப்பம்,  நிதி ஒதுக்கீடு,

மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான நகரமாக, கோவையை மத்திய அரசு தேர்வு செய்து, 10 ஆண்டுகளாகியும், ஒரு கோடி ரூபாய் கூட நிதி ஒதுக்காத தமிழக அரசு, கடைசி நேரத்திலும் ஒரு குழப்பமான அறிவிப்பையே வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை நகரங்களில், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 19 நகரங்களை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தகுதியான நகரங்களாக, கடந்த 2011ம் ஆண்டில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தேர்வு செய்தது.இதில், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரே நகரம், கோவை மட்டுமே. இதற்கான நிதியில் பாதியை மத்திய அரசு வழங்குமென்றும் அறிவிக்கப்பட்டது. இதே நாளில் அறிவிக்கப்பட்ட கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இத்திட்டம், மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.பல நகரங்களில் இதற்கான பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால், கோவை நகரில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை கூட தயார் செய்யப்படவில்லை. '


latest tamil news




மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், ஏழாண்டுகளுக்கு முன்பே கோவையில் நேரில் ஆய்வு செய்துவிட்டு, கோவை நகரம், மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றத் தகுதியான வழித்தடம் மற்றும் கட்டமைப்புடன் இருப்பதாகக் கூறிச் சென்றார். அதற்குப் பின்னும், சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு கூட மேற்கொள்ளப்படவில்லை.'சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் இண்டியா பிரைவேட் லிமிடெட்-ரைட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம், ஜெர்மன் அரசின் நிதியுதவியுடன் முதற்கட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 136 கி.மீ.,க்கு ஐந்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, 2019ம் ஆண்டிலேயே அறிக்கை கொடுத்துவிட்டது. அதற்குப் பின்னும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடவில்லை; அதற்காக நிதியும் ஒதுக்கவில்லை.

இந்நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 6,683 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. உடனே அதற்கு பல தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால், உண்மையில் பட்ஜெட் உரையில் நிதி ஒதுக்கீடு செய்ததாக எந்தத் தகவலும் இல்லை. பட்ஜெட்டின், 58ம் பக்கத்தில் இதுகுறித்த சில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

அதில், 'கோவையில் 6,683 கோடி ரூபாய் மதிப்பில், முதற்கட்டமாக 44 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலிக்கப்படுகிறது' என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த பத்தாண்டுகளில் பல முறை சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இப்போதும் நிதி ஒதுக்கியதாகவோ, திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகவோ எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லை.

இதேபோன்று விமான நிலைய விரிவாக்கத்துக்கும் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. கோவை வரும் பிரதமரிடம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்கு தொழில் அமைப்புகள் தயாராகி வருகின்றன.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-பிப்-202101:49:08 IST Report Abuse
தமிழவேல் நாளைக்கே ஒரு கல் நட்டுட்டா போவுது.... 😂
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-பிப்-202120:44:01 IST Report Abuse
Nagarajan D எத்தனை முறை தான் கோவைக்கு மெட்ரோ கொண்டுவருவானுங்களோ இந்த திராவிட திருடனுங்க.... தி மு க மற்றும் அதிமுக ஒழிந்தால் தான் தமிழகம் முன்னேறும்.... இது வரை 5 முறை கோவைக்கு மெட்ரோ என அறிவித்து விட்டு அதற்கு வழி தடத்தையும் அறிவித்துவிட்டு என்று ஏன் இந்த பித்தலாட்டம்? திட்டம் அறிவித்தால் அதற்குண்டான பண ஒதுக்கீடு இல்லாமல் என்ன செய்ய முடியும்? எல்லாம் அறிக்கை மயமாகவே இருக்கிறது.... வெத்து அரசியல் வியாதிகள்
Rate this:
Cancel
24-பிப்-202118:39:29 IST Report Abuse
ஆப்பு மதுரை எய்ம்ஸுக்கு ஜப்பானிடம் கையேந்துறோம். கோவை மெட்ரோவுக்கு ஜெர்மனியிடம் கையேந்துறோம். வெற்றிநடை போடும் தமிழகமே... அடிக்கல் நாட்டுவோம் தமிழகமே... மக்களை குழப்புவோம் தமிழகமே... அம்மாவின் ஆட்சி தமிழகமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X