வாங்க மோடி... வணக்கங்க மோடி: கொங்கு பாஷையில் வரவேற்பு பாடல்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
கோவை: கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ. கட்சியினர் கொங்கு பாஷையில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடல் தயாரித்துள்ளனர்.பா.ஜ. சார்பில் கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில் நாளை மாலை 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரை கொங்கு பாஷையில் வரவேற்கும் விதமாக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில் கலை
வாங்க மோடி,வணக்கங்க மோடி, கொங்கு பாஷை, வரவேற்பு பாடல், பிரதமர் மோடி

கோவை: கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ. கட்சியினர் கொங்கு பாஷையில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடல் தயாரித்துள்ளனர்.

பா.ஜ. சார்பில் கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில் நாளை மாலை 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரை கொங்கு பாஷையில் வரவேற்கும் விதமாக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில் கலை இலக்கிய பிரிவின் உமேஷ்பாபு 'ஆர்கெஸ்ட்ரா' சண்முகம் இணைந்து பாடல் வரிகளை தயாரித்துள்ளனர்.''வாங்க மோடி வணக்கங்க மோடிகொங்கு மக்கள் வரவேற்போம் கோடிநீங்க தந்த திட்டங்கள் கோடி மக்கள் என்றும் உங்க பின்னாடி அனைவருக்கும் வீடு மருத்துவ காப்பீடுவாங்க மோடி வணக்கங்க மோடிகொங்கு மக்கள் வரவேற்போம் கோடி...'' என்ற மூன்று நிமிட பாடலை தயாரித்துள்ளனர்.

அதில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்ற முதல் வரியை அகில இந்திய பொது செயலர் சி.டி.ரவி, கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், துணை தலைவர் அண்ணாமலை, இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பாடிஉள்ளனர். சில வரிகளை பாடகர்களுடன் இணைந்து வானதியும் பாடியுள்ளார்.பாடல் இன்று வெளியிடப்படுகிறது.


முழுவீச்சில் தயாராகும் கோவை கொடிசியா மைதானம்!
latest tamil newsகோவையில் நாளை நடக்க உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார். நாளை காலை, 07.45 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், காலை, 10.20 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து, ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார்.அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் மீண்டும் மதியம், 2.10 மணிக்கு சென்னை திரும்பி அங்கிருந்து, தனி விமானத்தில் மாலை, 3.30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில், 'கொடிசியா' செல்லும் பிரதமர் பல்வேறு திட்டங்களையும், முடிவு பெற்ற திட்ட பணிகளையும் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மாலை கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளார்.


பிரமாண்ட மேடை
latest tamil newsபிரதமர் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பு பணியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொடிசியா மைதானத்தில், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் மோப்பநாயுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும், 'கொடிசியா' ரோட்டில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்த 'மேப்' ஒன்றையும் பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்டுள்ளனர்.பிரதமரை வரவேற்க மாநில பா.ஜ., சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் கொடிசியா வரை இரு புறங்களிலும் கொடி, தோரணங்கள் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மோடி வருகை தொடர்பான 'டிஜிட்டல்' விளம்பரத்துடன் வாகனங்கள் வலம் வந்து கொண்டுள்ளன.


பா.ஜ., எழுச்சிபா.ஜ., மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறுகையில், ''கோவை வரும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பா.ஜ., கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பிரதமருடன் பா.ஜ., தேசிய பொது செயலாளர் ரவி, உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையால் தமிழகத்தில் பா.ஜ.,வின் எழுச்சியை அனைவரும் காணலாம்,'' என்றார்.


வனப்பகுதி கண்காணிப்பு
latest tamil newsகோவை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிரடி படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாடிவயல், பூண்டி, சவ்காடு, நரசீபுரம், ஆனைகட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில், ஏ.டி.எஸ்.பி., மற்றும் இரண்டு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 48க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


குண்டு துளைக்காத கார்கள்பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக, டில்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில், சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் (எஸ்.பி.ஜி.,) 30 பேர் கோவை வந்துள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத, நான்கு கார்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு கார்களும் அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்பு டி.ஜி.பி.,ராஜேஸ் தாஸ் நேற்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட கோவை வந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
25-பிப்-202109:52:09 IST Report Abuse
ganapati sb manbumigu prathamar narendhira modiyai kovai makkal varaverkirom varuga velga yengal nagaruku makkalukku menmelum valrachiyai tharuga
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-பிப்-202109:11:29 IST Report Abuse
அம்பி ஐயர் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசைத் தான் தூக்கியாச்சே....
Rate this:
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
25-பிப்-202102:24:54 IST Report Abuse
Cheran கொங்கு பாஷை அல்ல, கொங்கு மொழி. பாஷை என்பது சமஸ்க்ரிதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X