வானமாமலை ஜீயர் மடத்தின் ரூ.ஒரு கோடி சொத்து அபகரிப்பு: 59 ஆண்டுகளுக்கு முன் போலி பத்திரம் மூலம் மோசடி செய்தது அம்பலம்

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (12)
Advertisement
மதுரை: மதுரை மாடக்குளத்தில் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்திற்கு பாத்தியப்பட்ட ரூ.ஒரு கோடி மதிப்புள்ள 26 சென்ட் இடம், 59 ஆண்டுகளுக்கு முன் போலி பத்திரம் தயாரித்து 7 பிளாட்களாக பிரித்து விற்று மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே நம்பிள்ளை ஜீயர் சன்னதி உள்ளது. இது வானமாமலை ஜீயர் மடத்தின் பராமரிப்பில் உள்ளது. 1939ல் ஆண்டாள் என்பவர்,
 வானமாமலை ஜீயர் மடத்தின்  ரூ.ஒரு கோடி சொத்து அபகரிப்பு:   59 ஆண்டுகளுக்கு முன் போலி பத்திரம் மூலம் மோசடி செய்தது அம்பலம்

மதுரை: மதுரை மாடக்குளத்தில் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்திற்கு பாத்தியப்பட்ட ரூ.ஒரு கோடி மதிப்புள்ள 26 சென்ட் இடம், 59 ஆண்டுகளுக்கு முன் போலி பத்திரம் தயாரித்து 7 பிளாட்களாக பிரித்து விற்று மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே நம்பிள்ளை ஜீயர் சன்னதி உள்ளது. இது வானமாமலை ஜீயர் மடத்தின் பராமரிப்பில் உள்ளது. 1939ல் ஆண்டாள் என்பவர், நம்பிள்ளை சன்னதியை பராமரித்த திருமாலிருஞ்சோலை ஜீயர் பெயரில் நந்தவனம் தோட்டம் அமைக்க மாடக்குளத்தில் 26 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். நாளடைவில் இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியது.

இதுகுறித்து மடத்தின் பிரதிநிதி அப்பாத்துரை 85, கூறியதாவது: கூடலழகர் கோயில் அருகேயுள்ள நம்பிள்ளை ஜீயர் சன்னதி இடத்தை அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்தார். அதற்காக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி, கடந்தாண்டு பிப்.,14ல் அந்த இடத்தை மீட்டோம். இதற்கான ஆவணங்களை தேடியபோதுதான் மாடக்குளத்தில் மடத்திற்கு சொந்தமான 26 சென்ட் இருப்பது தெரிந்தது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.ஒரு கோடி.

மாநகராட்சி ஆவணங்களிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் தேடியபோது 1962ல் ஆண்டாள் கையெழுத்திட்டு கொடுத்தது போல் போலி பத்திரம் தயாரித்து இடத்தை சிலர் ஆக்கிரமித்தனர். பின்னர் 1980ல் சிலருக்கு இடத்தை விற்றுள்ளனர். தற்போது மடத்தின் இடத்தை 7 பிளாட்களாக பிரித்துள்ளனர். இதில் 2 பிளாட்களில் வீடு கட்டப்பட்டுள்ளன. ஒரு பிளாட்டில் தொழில் நிறுவனம் உள்ளது. மீதி இடம் காலியாக உள்ளது.ஆவணங்களின் அடிப்படையில் இந்த இடத்தை மீட்க மீண்டும் ஒரு சட்டபோராட்டத்தை இந்த 85 வயதில் மேற்கொள்ள உள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivatsan Krishnamachari - Hyderabad,இந்தியா
27-பிப்-202109:12:22 IST Report Abuse
Srivatsan Krishnamachari சிவன் சொற்று குல நாசம். தெய்வம் நின்று தண்டிக்கும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
26-பிப்-202110:53:23 IST Report Abuse
M  Ramachandran எங்கெங் தெய்வம் நின்று அறுக்கும். 59 வருடம் முன்பு யார் ஆண்டார் என்று தெரியும். அபகரித்தல் யார் ஆரம்பித்து வைத்தார்கள் யேன்று எல்லோருக்கும் தெரியும். அந்த ரௌடிகள் தான் யுப்பொ ஆட்சிக்கட்டிலில் யுடிக்கற துடித்து கொண்டிருக்கிர்ராகள் அந்த கயவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களும் பல்லக்கு தூக்கிகளும் நேர்மையானவர்களை தூற்றியும் தெய்வங்களாய் யிகளாவதும் எப்போ ஞ்சானோதயம் வந்தது போல் பா ஜா விக்க வியல் தூக்கினாலா போட்டிக்கு லாபீஸ் கல் வெள்ளியினால் செய்த வேலை கையில் கொடுக்க அதன் கனத்தை பார்த்து ஆனந்தமாக வாங்கி வேறு ஒரு காரணத்தை கிளப்பி (ஒட்டு பிச்சைக்காக) யோக்ய தனத்தை மறைத்து ஏதோ மக்கள் ஒன்றும்தெரியாதவர்கள் என மாயையில் மயங்கி வெற்றி பெற்றுவிடலாம் எனற பகல் கனவில் ஊர்வலம் / பவனி செய்யம் திமு க்க தலைவர் அப்பன் கால யோக்ய தனத்தை மறந்து உங்கள் முன்பு நிற்கிறார் ஒட்டு போடுங்கள் என்று உப்பிஎஸ் பல மீடியாஸ்கல் மூலம் பட்டை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எனதை கிளப்பி கொண்டிருந்தாலும் மக்கள் மூடர்கள் அல்ல என்பது தெரிந்து விடும். ஆ தீ மு க்க வும் அங்கிருந்து வந்தவர்களே.
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
26-பிப்-202109:16:02 IST Report Abuse
visu இது போன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரிக்க வேண்டும் தவிர அடிப்படை ஆதாரம் இருந்தால் முதலில் இடத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு வழக்கை நடத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X