பொது செய்தி

இந்தியா

40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்ட் செல்வோம்; ராகேஷ் தியாகத் எச்சரிக்கை

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்டை நோக்கி செல்வோம் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் தியாகத் எச்சரித்துள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து 90 நாட்களுக்கு மேலாக டில்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக 11 சுற்றுகளாக
Rakesh Tikait, Threatens, Centre, Repeal, Farm Laws, March To Parliament, 40 Lakh Tractors, டிராக்டர் பேரணி, விவசாயிகள், போராட்டம், வேளாண் சட்டங்கள்

புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்டை நோக்கி செல்வோம் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் தியாகத் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து 90 நாட்களுக்கு மேலாக டில்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக 11 சுற்றுகளாக மத்திய அரசு பேச்சு நடத்தியும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்ட்டை முற்றுகையிடுவோம் என விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் தியாகத் எச்சரித்துள்ளார்.


latest tamil news


ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய விவசாயிகள்சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் தியாகத் பேசியதாவது: பார்லிமென்டை முற்றுகையிடுவது தொடர்பாக எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால், கடந்த முறை 4 லட்சம் டிராக்டர்களில் பேரணி சென்றோம். இந்த முறை பார்லிமென்டை நோக்கி 40 லட்சம் டிராக்டர்களை கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
26-பிப்-202100:56:40 IST Report Abuse
Ashok Subramaniam இவர் ராகேஷ் தியாகத் இல்லை.. ராகேஷ் செல்ஃபிஷ்... இவர்கள் கொள்ளையடித்தப் பணமெல்லாம் இவர்களை செலவழிக்க வைத்து ஓட்டாண்டிகளாக்கினால் (உண்மையாலுமே), தானாக ஆட்டம் முடிவுறும்..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-பிப்-202109:11:41 IST Report Abuse
Rajagopal ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு சராசரி ஆயிரம் ருபாய் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு 150000 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், தினமும் 150 000 000 ரூபாய் செலவாகும். இதை 100 நாட்களுக்கு நீடித்தால் 150 000 00 000 ருபாய் மொத்தம். இவர்களுக்கு எங்கேயிருந்து இத்தனை பணம் வருகிறது? வசதியாக உட்கார்ந்து கொண்டு, டிராக்டர் வண்டிகளை வைத்துக்கொண்டு இப்படி ஓட்டுகிறார்களென்றால் பணம் பல இடங்களிலிருந்து வருகிறது. அதை கண்டு பிடித்து தடை செய்து விட்டால் இவர்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போவார்கள்.
Rate this:
Raman - kottambatti,இந்தியா
25-பிப்-202111:02:57 IST Report Abuse
Ramanநீ கொஞ்ச நாளைக்கு சோறு சாப்பிடாமல் இரு. நிறைய பணம் சேமிக்கலாம்.. யாரும் அரிசி வாங்கலைன்னா அவங்களே போயிடுவாங்க.. எப்படி......
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
25-பிப்-202101:58:25 IST Report Abuse
kalyanasundaram THIS STRIKE MAY NOT LAST LONGER SINCE TIME FOR CULTIVATING IN THEIR LANDS IS VERY MUCH CLOSE BY. DUE TO CLIMATIC CHANGES FAST APPROACHING
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X