பொது செய்தி

இந்தியா

வடமாநிலத்தவர்களை இழிவு செய்தாரா ராகுல்?; டிரெண்டிங்கில் காரசாரம்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: வட மாநிலங்களில் 15 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்த காங்., முன்னாள் தலைவர் ராகுல், தற்போது கேரளாவின் எம்.பி.,யாக உள்ளார். அப்படியிருக்கையில், நேற்று (பிப்.,23) கேரளாவில் பேசிய ராகுல், வடமாநிலத்தில் வேறுவிதமான அரசியல் இருப்பதாகவும், கேரளாவில் சமூக பிரச்னைகள் ஆழமாக நாட்டம் கொண்டிருப்பதாகவும் கூறினார். இது வட மாநிலத்தவர்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும்
Amethi, Rahul, TwitterTrending,

புதுடில்லி: வட மாநிலங்களில் 15 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்த காங்., முன்னாள் தலைவர் ராகுல், தற்போது கேரளாவின் எம்.பி.,யாக உள்ளார். அப்படியிருக்கையில், நேற்று (பிப்.,23) கேரளாவில் பேசிய ராகுல், வடமாநிலத்தில் வேறுவிதமான அரசியல் இருப்பதாகவும், கேரளாவில் சமூக பிரச்னைகள் ஆழமாக நாட்டம் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இது வட மாநிலத்தவர்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டானது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்., எம்.பி., ராகுல், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கேரளாவிற்கு தற்போது சுற்றுப்பயணம் சென்ற ராகுல், திருவனந்தபுரத்தில் பொதுக் கூட்டத்தில் பேசியபோது, 'எனது அரசியல் வாழ்வில் முதல் 15 ஆண்டு காலம் நான் வடகே எம்.பி.,யாக இருந்தேன். ஆகையால், நான் வேறுவிதமான அரசியலுக்குப் பழகியிருந்தேன். அரசியல் ரீதியாக திடீரென கேரளாவுக்கு மாறுதலானது புத்துணர்வைத் தந்தது. கேரள மக்கள், சமூக பிரச்சினைகள் மீது மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். கேரள மக்கள் அரசியலை அணுகுவதில் ஒருவித நுண்ணறிவு இருக்கிறது,' எனப் பேசியிருந்தார்.


latest tamil news


இதற்கு பா.ஜ.,வினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 3 முறை எம்.பி.,யாக இருந்தவர் ராகுல். 2019 லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்ட அவர், அமேதியில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார். வயநாட்டில் வென்ற ராகுல், தற்போது 3 முறை வெற்றி பெற்ற வட இந்தியத் தொகுதியைத் தாழ்த்தியும், ஒரு முறை வெற்றி பெற்ற கேரள தொகுதியை உயர்த்தியும் பேசி, பிரிவினையைத் தூண்டுவதாக பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர்.


latest tamil news


ராகுலின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. சிலர், 'வெற்றி பெற்ற தொகுதியை புகழ்வது வாடிக்கையாக இருந்தாலும், முன்பு 3 முறை வெற்றியை கொடுத்த வட மாநிலத்தவர்களை இழிவுப்படுத்துவது போல் பேசுவது ஏற்புடையது அல்ல' என்று கருத்து தெரிவித்தனர்.

இன்னும் சிலர், 'கேரள மக்கள் அரசியலை அணுகுவதில் நுண்ணறிவு இருப்பதாக கூறும் ராகுல், வட மாநிலத்தில் உள்ளவர்களிடம் அரசியல் நுண்ணறிவு இல்லை என்கிறாரா' என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேநேரத்தில் ராகுலுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறியுள்ளனர். இந்த விவகாரம் டுவிட்டரில் காரசார விவாதமாக மாறியது. இதனால் Amethi, Rahul போன்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டானது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-பிப்-202114:41:28 IST Report Abuse
Swaminathan Chandramouli அப்படிதான் தனக்கு தானே ஏதாவது முணுமுணுத்து கொண்டே இருப்பான் நாம அதனை பொருட்படுத்த கூடாது சேற்றில் கல்லெறிந்தால் நம் மீதும் தெறிக்கும்
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
25-பிப்-202111:15:54 IST Report Abuse
ganapati sb தனித்த கடற்கரை கொண்ட கேரளாவில் அரேபிய ஐரோப்பிய சீனா கலச்சாரங்கள் விளைச்சல் நிலங்களை ஊடுருவி தேர்தல் வெற்றி தோல்வி நிர்ணயிக்கும் அளவிற்கு உள்ளதால் மண்ணின் மைந்தர்களான படித்த மலையாளிகள் அயல்நாட்டையும் அண்டை மாநிலங்களையும் சார்ந்து உள்ளனர் இந்நிலை மாறி கேரளம் தற்சார்பை பெறவேண்டும்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
25-பிப்-202107:04:10 IST Report Abuse
natarajan s வட நாட்டு முட்டாள்கள் நாங்கள் நாட்டை கொள்ளை அடிப்பது தெரியாமல் , இதுநாள்வரை என் அம்மாவுக்கும், எனக்கும் வாக்களித்து MP ஆக்கி விட்டார்கள் , என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X