விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி: பிரதமர் மோடி

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வருமான ஆதரவை வழங்கும்
PMModi, FarmersIncome, PossibleToDouble, HistoricIncrease, MSP, பிரதமர், மோடி, விவசாயிகள், வருமானம், குறைந்தபட்ச ஆதார விலை, இரட்டிப்பு

புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வருமான ஆதரவை வழங்கும் ஆகும். இத்திட்டம் துவங்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ச்சியான டுவீட்டுகளில், 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது,' என தெரிவித்துள்ளார்.


latest tamil news


மேலும் அவர் பதிவிட்டதாவது: இதே நாளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பி.எம்-கிசான் திட்டம் கண்ணியமான வாழ்க்கையையும், நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு செழிப்பையும் உறுதிசெய்யும் நோக்கில் துவங்கப்பட்டது. அவர்கள் நம் தேசத்திற்கு உணவளிக்க இரவும் பகலும் உழைக்கிறார்கள். விவசாயிகளின் உறுதியும் ஆர்வமும் தான் நமக்கு ஊக்கமளிக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில், இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. சிறந்த நீர்ப்பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன் மற்றும் முறையான பயிர் காப்பீடுக்கான சந்தைகள் வரை, மண்ணின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, இடைத்தரகர்களை அகற்றுவது ஆகிய முயற்சிகள் அனைத்தையும் எடுத்துள்ளது. பயிர்களை கொள்முதல் செய்வதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு செய்த பெருமை எங்களது அரசிற்கு உண்டு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
25-பிப்-202100:24:15 IST Report Abuse
Raj அம்பானி சொத்து பத்து மடங்கு அதிகம். அமித் ஷாக்கு இருவது மடங்கு. விவசாயிக்கு இரண்டு தானா?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-பிப்-202112:31:18 IST Report Abuse
Visu Iyerஅவர்களை வளர்த்து விட்டது மக்கள் தானே...நீங்கள் சொல்லும் அவர்கள் பொருட்களை வாங்காதீர்கள் புறக்கணியுங்கள்.. அவர்களால் வியாபாரம் செய்ய முடியாமல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள்.....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-பிப்-202120:41:46 IST Report Abuse
Ramesh Sargam விவசாயிகளின் வருமானத்தை நான்கு மடங்கு அதிகரித்தாலும், இப்பொழுது நடக்கும் போராட்டத்தை இந்த 'போலி விவசாயிகள்' தொடருவார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல. விவசாயிகள் போர்வையில் உள்ள ஒரு சில கட்சியின் ஆதரவாளர்கள், மற்றும் இடை தரகர்கள்.
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
24-பிப்-202119:11:33 IST Report Abuse
mohankumar விவசாயிகள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று அவர்களுடைய எந்த விளைபொருளும் விற்க முடியாது . ப்ரோக்கர்கள் வந்து மொட்டை அடித்து விட்டு செல்வார்கள் அவர்கள் தான் வெளி மாநிலங்களுக்கு சென்று விற்க முடியும் அந்த நிலைய மோடி மாற்றி விட்டார் . அதனால தான் விவசாயிக்கு இரட்டிப்பு வருமானம் நீச்சயம் கிட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X