பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 தடுப்பூசிகள்: விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு
CoronaVaccine, ThreeMore, CovidVaccine, Made in India, கொரோனா, தடுப்பு மருந்து, தடுப்பூசி

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.


latest tamil news


ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் தடுப்பூசிகளின் ஒப்புதலுக்கான தரவுகளை சமர்ப்பித்து உள்ளன. முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சந்தையில் உள்ள கோவிஷீல்டு மருந்தை தவிர சீரம் இன்ஸ்டியூட் மற்றொரு தடுப்பூசியை தயாரித்து வருகிறது. 2021ம் ஆண்டின் பிற்பாதியில் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X