பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: உயர் போலீஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையே அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.முதல்வர் பழனிசாமி, கடந்த 21ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அவரது பாதுகாப்புக்கு பணியின்போது
DGP_RajeshDas, SexualHarassment, EnquiryCommittee, Tamilnadu, டிஜிபி ராஜேஸ்தாஸ், பாலியல் புகார், பெண் ஐபிஎஸ் அதிகாரி, விசாரணைக்குழு

சென்னை: உயர் போலீஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையே அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
முதல்வர் பழனிசாமி, கடந்த 21ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அவரது பாதுகாப்புக்கு பணியின்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக உயர் போலீஸ் அதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், 'பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையை பார்த்து அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தலைகுனிய வேண்டும். டிஜிபி ராஜேஸ் தாஸை சஸ்பெண்ட் செய்து கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,' என வலியுறுத்தினார்.


latest tamil news


இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததை அடுத்து, அவர்மீது விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்தது. கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவில் சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டிஐஜி சாமூண்டிஸ்வரி ஆகியோர் உள்ளனர்.இதையடுத்து பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
25-பிப்-202113:52:37 IST Report Abuse
S.P. Barucha காவல் துறையில் அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை நிறைய காமுகர்கள் இருக்கிறார்கள். சாயங்காலம் என்றால் சரக்கு அடித்துவிடவேண்டியது, அப்புறம் எங்கிருந்து ஒழுக்கம் எதிர்பார்ப்பது.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
25-பிப்-202111:07:48 IST Report Abuse
ponssasi இதற்கு முன் முருகப்பெருமான் பெயர் கொண்ட ஒரு அதிகாரிமீது மற்றொரு பெண் அதிகாரி புகார்கொடுத்ததாக ஞாபகம். அந்த விசாரணை எந்த நிலையில் உள்ளது. அவர் இன்னும் பணியில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார். அப்போது திரு ஸ்டாலின் இதை பற்றி வாய் திறக்கவில்லை, குறைந்த பட்ச கண்டனம் கூட சொல்லவில்லை என நினைக்கிறேன். இவருக்கு எதிராக ஏன் குடும்பமே குதிக்கிறது. குற்றம் நடந்திருந்தால் நிச்சியம் தண்டிக்கப்படவேண்டியவர் தான்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-202123:03:43 IST Report Abuse
தமிழவேல் இதுக்கு 6 பேரா ? எத்தினிவருஷம் ஆகும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X