சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம் கொரோனா குறையும்ஸ்காட்லாந்தில் தடுப்பூசியால் மருத்துவமனையில் சேரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என ஆய்வு தெரி வித்து உள்ளது. பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின், மருத்துவமனையில் சேர்பவர்களின் எண்ணிக்கை 85% மற்றும் 94% குறைந்துள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும்

அறிவியல் ஆயிரம்
கொரோனா குறையும்
ஸ்காட்லாந்தில் தடுப்பூசியால் மருத்துவமனையில் சேரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என ஆய்வு தெரி வித்து உள்ளது. பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின், மருத்துவமனையில் சேர்பவர்களின் எண்ணிக்கை 85% மற்றும் 94% குறைந்துள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளனர். 2020 டிச.8 - பிப்.15 வரை ஆய்வு நடந்தது. இதுவரை 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
தண்ணீர் குடிக்காத விலங்கு

வட அமெரிக்காவில் வறண்ட பாலைவனத்தில் கங்காரு எலிகள் உள்ளன. இவை கங்காருவை போல தன் பின்னங்கால்களினால் தாவி, தாவி ஓடுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. பல வகையான பருப்பு விதைகளே இதன் உணவுகள். விதைகளை உடனே சாப்பிடாமல், அதை தன் தாடையிலுள்ள பையில் வைத்து கொண்டு, தன் பொந்தில் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த விதைகள் நிலத்தின் ஈரத்தை கிரகித்து மெதுவாக பெருக்கிறது. அதன்பின் இவ்விதைகளை சாப்பிடும். இப்படி விதையிலுள்ள ஈரம்தான் இதற்கு நீராகிறதே தவிர இவை தண்ணீர் குடிப்பதே கிடையாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X