கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயம் பாதிப்பு 28,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: சாயப்பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்ததால் பாதிக்கப்பட்ட, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மே மாதத்துக்குள் இழப்பீடு தொகையை வழங்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், சாயப்பட்டறைகளின் கழிவுகள், நொய்யல் ஆற்றில் கலந்ததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 25 கோடி ரூபாய் டிபாசிட்இது
 சாயப்பட்டறை கழிவுகள், விவசாயம் பாதிப்பு  28,௦௦௦ விவசாயிகளுக்கு  இழப்பீடு

சென்னை: சாயப்பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்ததால் பாதிக்கப்பட்ட, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மே மாதத்துக்குள் இழப்பீடு தொகையை வழங்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், சாயப்பட்டறைகளின் கழிவுகள், நொய்யல் ஆற்றில் கலந்ததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.


latest tamil news



25 கோடி ரூபாய் டிபாசிட்

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில், 25 கோடி ரூபாய், ஆலை உரிமையாளர்கள் தரப்பில், டிபாசிட் செய்யப்பட்டது.
சாயப்பட்டறைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் வாயிலாக, 42 கோடி ரூபாய்; இழப்பீடாக வசூலிக்கப்பட்டு திருப்பூர் கலெக்டர் வசம், 7.64 கோடி ரூபாய்; நொய்யல் ஆற்று ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க, அரசு ஒதுக்கிய, 75 கோடி ரூபாய் என, உள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் என, 28 ஆயிரத்து, 596 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்க வசதியாக, உயர் நீதிமன்றம் வசமுள்ள, 25 கோடி ரூபாயை, அரசுக்கு மாற்றக் கோரி, கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செல்வகுமார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.கதிரேசன் ஆஜரானார். பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: இழப்பீடு பெறுவதற்கான விவசாயிகள் என, 28 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தாமதமாக வந்த விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், அரசு பிளீடர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிடும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.


தொகை எவ்வளவு

எனவே, இழப்பீடு கோரிய தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும், மே மாதத்துக்குள், இழப்பீடு கிடைப்பதை, தலைமை செயலர் உறுதி செய்ய வேண்டும். யார் யாருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது; தொகை எவ்வளவு; அவர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் வசமுள்ள பணத்தை மாற்றம் செய்ய, பதிவாளர் ஜெனரலை தலைமை செயலர் தொடர்பு கொள்ள வேண்டும். விசாரணை, ஜூன், 8க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
25-பிப்-202115:08:57 IST Report Abuse
SENTHIL NATHAN சாயப்பட்டறைகளுக்கு தண்ணீர் விற்பவர்களும் விவசாயிகள் தான் அந்த கொடூர உண்மை நிறைய பேருக்கு தெரியாது
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
25-பிப்-202107:51:47 IST Report Abuse
Darmavan இது என்ன ஏமாற்று வேலை.சாயக்கலவைகளை தடுத்து நிறுத்தாமல் செத்தவனுக்கு இழப்பீடு போல் நிலம் பாற்பட்ட பிறகு இழப்பீடு.இதை எப்படி நீதிமன்றம் ஏர்க்கிறது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
25-பிப்-202104:24:32 IST Report Abuse
தல புராணம் அந்த சாயக்கழிவு நீரை விட்டவன், அதை இல்லைன்னு சொன்ன அமைச்சன், அத கண்டுக்காம இருந்து லஞ்சம் வாங்கிகிட்டு ஊழியன் எல்லாருக்கும் சாயக்கழிவை ட்ரிப்ஸ்ஸில் ஏத்தி ஆளுக்கு ரெண்டு லிட்டர் போடணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X