பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் ரூ.1000

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக ரூ.1000 வழங்க

சென்னை:போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.latest tamil news


இது குறித்து அமைச்சர் கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக ரூ.1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா காலத்தின் போது போக்குவரத்து ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது. மாநிலத்தில் நாளை வழக்கம் போல் போக்குவரத்து இயங்கும். வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடாமல் ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டும்.


ரூ.1000 இடைக்கால நிவாரணம்போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலமாக அரசுக்கு 13 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பஸ்களையும் நாளை இயங்கும் . அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வு கால பயன்கள் வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


latest tamil news
முன்னதாக போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-பிப்-202115:38:14 IST Report Abuse
S.Baliah Seer விஜய பாஸ்கர், ஒட்டு வாங்க ஒரு குடும்பத்துக்கு ரூ 2500. ஆனால் உழைக்கும் போக்குவரத்து தொழிலாளிக்கு இடைக்கால நிவாரணம் rs .1000 இருக்கப்போவது இரண்டு மாதங்கள்.ஏனப்பா அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
25-பிப்-202113:55:49 IST Report Abuse
Nagarajan D தயவு செய்து எங்கள் பணத்தை யாருக்கும் வாரி வழங்கவேண்டாம்.... அப்படி கொடுக்கவேண்டும் என நினைத்தால் எந்த கட்சி அறிவிக்கிறது அந்த கட்சி தனது கட்சி பணத்தை வாரி கொடுக்கட்டும்.... தேர்தல் வந்தாலே எல்லா அரசு ஊழியனுங்களும் போராட ஆரம்பிபானுங்க உடனே அரசு ஒரு இடை கால நிவாரணம் அறிவிக்கும் என்ன ஒரு மோசடி தனம்... அரசு பேருந்துகள் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா? இல்லை பிறகு எதற்கு இவனுங்களுக்கு நிவாரணம்? சம்பளமே தண்டம்.....
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
25-பிப்-202111:00:07 IST Report Abuse
தமிழ்வேள் இந்த மந்திரிகள் அதிகாரிகளின் பினாமி ஆம்னி பஸ்களுக்காந டயர் ,ஸ்பேர் பார்டுகள் அரசு பஸ்களிலிருந்து திருடி தரப்படுகின்றன . செய்பவர்கள் அதிகாரிகள் ..அவர்கள் அரசு அலுவலர்களாம் அனைத்து ஓய்வுகால பலன்களும் உடனடியாக கிடைக்கும் ..ஆனால் ஓட்டுநர் நடத்துனர் மெக்கானிக்குகளுக்கு சம்பளம் தர காசு இல்லையாம் ...ஒய்வு கால பண பலன்கள் கிடையாதாம் ...வரும் வருமானம் எங்கே போகிறது ? அதிகாரிகள் கூட்டம் குறைக்கப்பட்டு சம்பளம் வெகுவாக குறைக்கப்பட வேண்டும் ..போக்குவரத்து துறை அப்போதுதான் உருப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X