சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஓ.பி.எஸ்., துணை முதல்வர்: நல்லாட்சியை வழங்கவும், நிதி ஒருங்கிணைப்பு பணியை மீண்டும் துவக்கவும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான, ஜெ., அரசை, தவிர, வேறு எவரையும், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்ற, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று, நான் உறுதியாக நம்புகிறேன்.'டவுட்' தனபாலு: தமிழக சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு சில நாட்களில்,
 'டவுட்' தனபாலு

ஓ.பி.எஸ்., துணை முதல்வர்: நல்லாட்சியை வழங்கவும், நிதி ஒருங்கிணைப்பு பணியை மீண்டும் துவக்கவும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான, ஜெ., அரசை, தவிர, வேறு எவரையும், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்ற, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று, நான் உறுதியாக நம்புகிறேன்.

'டவுட்' தனபாலு: தமிழக சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு சில நாட்களில், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருப்பது போலவும், சில நாட்களில், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருப்பது போலவும் தெரிகிறது. எனவே, அடுத்து யார் ஆட்சிக்கு வருவர் என்பது, மாபெரும், 'டவுட்' ஆக உள்ளது. எப்படியோ உங்கள் ஆசை நிறைவேறினால், தமிழக மக்களுக்கு நிம்மதி தான்!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஜெயலலிதாவின் பிறந்த நாளில், சசிகலாவின் வாழ்த்துகளோடு, தி.மு.க., எனும் தீய சக்தி கூட்டத்தை, தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என்ற கடமை, நம் கைகளில் இருக்கிறது. அதை நிறைவேற்றுவதே, தமிழக மக்களின் நலன்களுக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்த ஜெயலலிதாவுக்கு, நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.


'டவுட்' தனபாலு:
தமிழக மக்களின் நலன்களுக்காக தன் வாழ்நாளை ஜெ., அர்ப்பணித்தாரா அல்லது சசி அண்ட் கோ குடும்ப நலன்களுக்காக பாடுபட்டாரா என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு எப்போதும் உண்டு. ஏனெனில், ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், அந்த குடும்பத்தினர் பலர் இருக்கின்றனரே!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், தொடர் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று, எல்லா நிலைகளிலும், மிக மோசமான நிதி நிர்வாகத்தைக் கையாண்டு வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத, மாபெரும் நிதி பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டனர். 2006 -- 2011 வரை, தி.மு.க., ஆட்சியில் வெறும், 44 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன். ஆனால் தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில், 3.55 லட்சம் கோடி.

'டவுட்' தனபாலு: 'எளிதில் நீங்காத நிதி பேரிடரை, இருவரும் உருவாக்கி விட்டனர்' என, நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அடுத்து ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என, இஷ்டத்திற்கு, அள்ளி விடும் திட்டங்களை ஆற போட்டு விடுவீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறதே!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-பிப்-202122:35:39 IST Report Abuse
Anantharaman Srinivasan தமிழக மக்களின் நலன்களுக்காக தன் வாழ்நாளை ஜெ., அர்ப்பணித்தாரா அல்லது சசி அண்ட் கோ குடும்ப நலன்களுக்காக பாடுபட்டாரா? கொள்ளை கொள்ளையாக சேர்த்து வைத்துள்ளனரே. இவர்கள் மீது மத்தியரசு வழக்கு போட்டு அத்தனை சொத்தையும் அரசு காஜானாவில் சேர்க்க முடியாதா? அரசியலே நாடகமாகி விட்டது.
Rate this:
Cancel
thiru - madurai,ஐக்கிய அரபு நாடுகள்
25-பிப்-202110:04:50 IST Report Abuse
thiru அதையும் தள்ளுபடி பண்ணுங்க thalapathy
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
25-பிப்-202109:03:46 IST Report Abuse
Arul Narayanan Petrol prices may be a drawback for ADMK. They have to correct it.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X