அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களை விரைவில் சந்திப்பேன்: சசிகலா

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:''ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வேண்டும். விரைவில், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திப்பேன்,'' என, சசிகலா தெரிவித்தார்.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சென்னை, தி.நகரில் உள்ள வீட்டில், ஜெ., படத்திற்கு, சசிகலா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அதன்பின் தொண்டர்களை சந்தித்த, சசிகலா
 பொதுமக்களை விரைவில் சந்திப்பேன்: சசிகலா

சென்னை:''ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வேண்டும். விரைவில், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திப்பேன்,'' என, சசிகலா தெரிவித்தார்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சென்னை, தி.நகரில் உள்ள வீட்டில், ஜெ., படத்திற்கு, சசிகலா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அதன்பின் தொண்டர்களை சந்தித்த, சசிகலா பேசியதாவது:நான், கொரோனா பாதிப்பில் இருந்த போது, தமிழக மக்கள், கட்சி உடன் பிறப்புகள் வேண்டுதலால், நலம் பெற்று தமிழகம் வந்தேன்; அதற்கு என் நன்றி. ஜெ.,வின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.

தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் ஆட்சி இருக்க வேண்டும் என, ஜெ., சொல்லி விட்டு சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி, நம் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து, தேர்தலில் அமோக வெற்றி பெற்று, நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே, என் எண்ணம்.அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது. ஏனெனில், நீங்கள் ஜெ.,வின் உண்மை தொண்டர்கள். நானும் உங்களுக்கு துணை நிற்பேன்.

விரைவில், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க, நான் வருவேன்.ஜெ., போல உறுதியுள்ள தொண்டர்களான உங்களை, விலை கொடுத்து யாரும் வாங்க முடியாது என்பது, எனக்கு நன்றாக தெரியும். எனக்கு இன்று மகிழ்ச்சியான நாள். ஜெ.,வின் 73வது பிறந்தநாளை, உங்களோடு சேர்ந்து கொண்டாடி உள்ளேன்.அதற்கு விலை மதிப்பு கிடையாது. கோடான கோடி தொண்டர்களை, எனக்கு ஜெ., விட்டுச் சென்றுள்ளார்.

ஒவ்வொருவருடைய முகத்திலும், ஜெ.,வை நான் பார்க்கிறேன்.வரும் சட்டசபை தேர்தலில், ஜெ., கூறியதை நிரூபித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு, நமக்கு உள்ளது. அதற்காக ஜெ., தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெற வேண்டும்.ஜெ., ஆன்மா எப்போதும், நம்முடன் தான் இருக்கும். அதற்கு நன்றி கடன் செலுத்துவது வெற்றிதான்.

வரும் சட்டசபை தேர்தலில், ஒவ்வொருவரும் தேனீக்கள் போல் உழைத்து, வெற்றியை ஜெ.,வின் பாதத்தில் வைக்க வேண்டும். அதற்கு உறுதி எடுத்து, உழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
28-பிப்-202118:10:20 IST Report Abuse
sankar மிஞ்சியது நாலேபேர்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
25-பிப்-202114:18:32 IST Report Abuse
Narayanan no need to come. You can take rest for the rest of your life. If you want to come and meet public, first give us the reply for the questions. 1. At time of seriousness of Jayaji Where was the securities? 2. Why all the camera from Jayaji and Apollo hospital 3.How the charges being done by Apollo for Idli by crores of Rs.?4. After all you are Jayaji asst, what is qualification do you have to become CM? 5. Why jayaji was killed by you? Why you had come back to Jayaji house in 2012? Enough is enough go back to your original place.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
25-பிப்-202113:59:17 IST Report Abuse
SENTHIL NATHAN இதெல்லாம் தேவையா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X