அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிறப்பு டி.ஜி.பி.,யை 'சஸ்பெண்ட்' செய்யுங்க!'

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:'பெண் எஸ்.பி., கொடுத்துள்ள புகார் மீது, உடனே நடவடிக்கை எடுத்து, சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ்தாசை, 'சஸ்பெண்ட்' செய்து, கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் சில போலீஸ் அதிகாரிகளையும், அ.தி.மு.க.,வினரையும் பாதுகாக்கும் முதல்வர் இ.பி.எஸ்., பெண் இனத்தின்

சென்னை:'பெண் எஸ்.பி., கொடுத்துள்ள புகார் மீது, உடனே நடவடிக்கை எடுத்து, சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ்தாசை, 'சஸ்பெண்ட்' செய்து, கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் சில போலீஸ் அதிகாரிகளையும், அ.தி.மு.க.,வினரையும் பாதுகாக்கும் முதல்வர் இ.பி.எஸ்., பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது, மிகுந்த கவலையளிக்கிறது.பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லவே பெண்கள் பயந்து, தயங்கும் நேரத்தில், இந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, தன் சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது, புகார் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியின் துணிச்சலுக்கு, நான் தலை வணங்குகிறேன். சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால், சீருடையில் உள்ள பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை.பெண் எஸ்.பி., கொடுத்துள்ள புகார் மீது, உடனே நடவடிக்கை எடுத்து, சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ்தாசை சஸ்பெண்ட் செய்து, கிரிமினில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பெண் போலீசர் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்தால், தி.மு.க., மாபெரும் போராட்டத்தில் இறங்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-பிப்-202108:27:44 IST Report Abuse
Bhaskaran உண்மை முழுவதும் வெளிவந்தபின் அறிக்கை விடுங்கள்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
25-பிப்-202107:31:11 IST Report Abuse
natarajan s இப்போது கூட பாதிக்கப்பட்டது ஒரு IPS அதிகாரி என்றவுடன் செய்தி வெளி வருகிறது, இதுநாள்வரை பெண் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை இதுமாதிரி அதிகாரிகளிடம் சிக்கி சீண்டலுக்கு உள்ளானோர் யாரும் புகார் கூட அளிக்க முடியாது அப்படி ஒரு கட்டு கோப்பு இந்த அதிகாரிகளிடம் உண்டு . KPS Gill என்ற பஞ்சாப D G P மிஸ், ரூபன் பஜாஜ் என்ற பெண் IPS அதிகாரியிடம் சில்மிஷம் செய்தார் என்று உச்ச நீதி மன்றம் வரை வழக்கு சென்றது . உயர் அதிகாரிகளை சீண்டினால் அது news கீழ் நிலை அதிகாரிகள் என்றால் இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X