சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பொறாமை மன அழுத்தத்தை அதிகரிக்கும்!

Added : பிப் 24, 2021
Share
Advertisement
பொறாமை மன அழுத்தத்தை அதிகரிக்கும்!மன நோய் ஏன் வருகிறது; அதை தவிர்ப்பது எப்படி என்பது பற்றி, மதுரை மன நல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன்: மனநல பிரச்னைகள் அதிகமாவதற்கு, மகிழ்ச்சியான வாழ்க்கையை விட்டு, இயந்திரமயமான வாழ்க்கைக்கு மாறி விட்டது தான் காரணம். சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டது. கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிப்பட்ட குடும்பத்திற்கு போயிட்டோம்.

சொல்கிறார்கள்


பொறாமை மன அழுத்தத்தை அதிகரிக்கும்!



மன நோய் ஏன் வருகிறது; அதை தவிர்ப்பது எப்படி என்பது பற்றி, மதுரை மன நல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன்: மனநல பிரச்னைகள் அதிகமாவதற்கு, மகிழ்ச்சியான வாழ்க்கையை விட்டு, இயந்திரமயமான வாழ்க்கைக்கு மாறி விட்டது தான் காரணம். சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டது. கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிப்பட்ட குடும்பத்திற்கு போயிட்டோம். கற்பனையான ஒரு குறிக்கோளை வைத்தபடி, கற்பனையான வாழ்க்கை வாழ்ந்தபடி, கற்பனையான நடைமுறையை பழக்கப்படுத்தியபடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எல்லா உடல் நலன்களுக்கும் முக்கியமானது மனநலன் தான். மன நலன் சரியில்லாமல் போனால், உடல் நலன் சரியாக இருக்காது.மன நோய் இருக்கிறது என்பதை துாக்கத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். தொடர்ந்து துாக்கம் இல்லாமல் போய், அடுத்த நாள் வேலையை, மன நிம்மதி கெடுத்தால், அது தான் மனநோய்க்கு அறிகுறி.தற்கொலை செய்து கொள்வதும் மன அழுத்தத்தின் வெளிப்பாடு தான். ஒவ்வொரு தற்கொலையையும் நாம் தடுக்க முடியும். தகுந்த சிகிச்சை அவசியம்.தேவையில்லாமல் கோபப்படுவதும், சந்தேகப்படுவதும் மன நோயின் வெளிப் பாடு தான். மன நிம்மதிக்காக மது அருந்துவது, கஞ்சா பிடிப்பது போன்றவை மன
நோயின் அறிகுறி தான்.நம் சமூகம், மனநோயாளியை கோரமாகத் தான் பார்க்குது. எய்ட்ஸ் நோயாளியைக் கூட ஏற்றுக் கொள்வர். மன நோயாளியை ஏற்க மாட்டார்கள். சாதாரணமாக இருக்கும் போதே, மன நோயை குணப்படுத்தி விடலாம். மன நோய்க்கு கொடுக்கும் மருந்துகள் அனைத்தும் துாக்க மருந்துகள் தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. அதுபோல, அத்தகைய மாத்திரைகளை ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது. அது தவறு. மன நோய் குறைந்ததும், மருந்து சாப்பிடுவதையும் நிறுத்தி விடலாம்.

நம் திறமைகளுக்கு தகுந்த மாதிரி ஆசைகளை கொண்டிருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. போதும் என்ற மனமே பொன் மனது. தேவையில்லாமல் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பொறாமைப்படுவதும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வாழ்க்கையை அனுபவித்து, மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள். இன்னும் சொல்லப் போனால், கொடுத்து பழகுங்க. உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், அதை பிறருக்கு கொடுங்கள். பொருள் இருந்தால், அதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள். கவலைகள் இருக்கிறதா, அதை எங்காவது கொட்டி விடுங்கள்.சந்தோஷமாக இருங்கள். உடலை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மனதையும் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X