பொது செய்தி

இந்தியா

வரும் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசம்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'வரும், 1ம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நாடு முழுதும் உள்ள அரசு தடுப்பூசி மையங்களில், கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்' என, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.கொரோனா தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும், கடந்த மாதம் துவங்கியது. முதற்கட்டமாக, சுகாதார மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. உலகின் மிகப் பெரிய
 1ம் தேதி , கொரோனா தடுப்பூசி... இலவசம்! 60 வயது

'வரும், 1ம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நாடு முழுதும் உள்ள அரசு தடுப்பூசி மையங்களில், கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்' என, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும், கடந்த மாதம் துவங்கியது. முதற்கட்டமாக, சுகாதார மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி பணியாக கருதப்படும் இதில், ஒரு கோடியே, ஏழு லட்சத்து, 67 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில், 14 லட்சம் பேருக்கு, இரண்டாவது, 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


முக்கிய முடிவுகள்



இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இதில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பணி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இது குறித்து, செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பணி, வரும், 1ம் தேதி முதல் துவங்குகிறது.

இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 'கார்மாபிடைட்டிஸ்' எனப்படும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இரண்டுக்கும் மேற்பட்ட, நாள்பட்ட நோய் உள்ள, 45 வயதுக்கு மேற்பட்டவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.நாடு முழுதும் உள்ள, 10 ஆயிரம் அரசு தடுப்பூசி மையங்கள், 20 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளில், இந்த தடுப்பூசிகளை போடலாம். அரசு மையங்களில், தடுப்பூசி இலவசமாக போடப்படும். அதற்கான தொகையை, மத்திய அரசு ஏற்கும்.



எதிர்பார்ப்பு



தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை வாங்கி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு மருந்துகளை வினியோகிக்கும்.தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட விரும்புபவர்கள், தங்கள் சொந்த செலவில் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கான கட்டண விபரங்கள், இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.இந்த இரண்டாம் கட்ட பணியில், 60 வயதுக்கு மேற்பட்ட, 10 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


மருந்து மற்றும் ஐ.டி., துறைக்கு ஊக்கத்தொகை



ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப துறையில், மடிக்கணினிகள், 'டாப்லெட்'கள், பி.சி., எனப்படும், 'பர்சனல் கம்ப்யூட்டர்' தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2020 - 21 முதல், 2028 - 29 நிதியாண்டு வரை இத்திட்டத்தை செயல்படுத்த, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறையில், ஊக்கத் தொகை வழங்குவதற்காக, 7,325 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 3.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகள் மற்றும் டாப்லெட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு வாயிலாக, மின்னணு சாதன தயாரிப்பு துறையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஆயிரம் நேரடி மற்றும் 80 ஆயிரம் மறைமுக வேலை வாய்ப்பும் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர்கள் தடுப்பூசி போடுவரா?



இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணியின் போது, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:பெரும்பாலான நாடுகளில், பிரதமர்களும், அமைச்சர்களும் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கு, கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சுகாதார மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் என கருதினோம். அதனால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களை பொறுத்தவரை, பெரும்பாலானாவர்கள், கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளவே விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தனியார் வங்கிகளுக்கு தடை நீக்கம்



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டு இருந்ததாவது:தனியார் வங்கிகளுக்கு, அரசு வர்த்தகம் வழங்குவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தனியார் வங்கிகளுக்கும் இனி சமபங்கு உள்ளது. இவ்வாறு, அதில் அவர் பதிவிட்டுள்ளார்.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-பிப்-202119:29:10 IST Report Abuse
கல்யாணராமன் சு. அரசு மருத்துவ மனையில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுகொள்ளமுடியுமா ? இந்த கேள்விக்கு காரணம், அரசு மருத்துவ மனைக்கு மரியாதை அளிப்பது ....... மற்றும், இலவசமாக இல்லாமல் கட்டணம் செலுத்தி தடுப்பூசி பெற்றுக்கொள்வது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X