தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

புதுச்சேரியில் ஸ்டாலின் சதுரங்கம் :விழி பிதுங்கும் காங். தலைமை

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுச்சேரியில் காங்கிரசும், தி.மு.க.,வும், 2004ம் ஆண்டு கூட்டணி சேர்ந்தன. அதன் பின் நடந்த மூன்று சட்டசபை தேர்தல்களையும் ஒன்றாக சந்தித்தன. தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது தி.மு.க., ஆனால், புதுச்சேரியில் கூட்டணி செயல்படுவது, காங்கிரஸ் தலைமையில். குட்டி மாநிலத்தில், தி.மு.க.,வை விட, காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகம் என்பதை காரணமாக வைத்து, இந்த ஏற்பாடு. அது உண்மை தான்
புதுச்சேரி, ஸ்டாலின் சதுரங்கம்,விழி பிதுங்கும் காங். தலைமை

புதுச்சேரியில் காங்கிரசும், தி.மு.க.,வும், 2004ம் ஆண்டு கூட்டணி சேர்ந்தன. அதன் பின் நடந்த மூன்று சட்டசபை தேர்தல்களையும் ஒன்றாக சந்தித்தன.

தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது தி.மு.க., ஆனால், புதுச்சேரியில் கூட்டணி செயல்படுவது, காங்கிரஸ் தலைமையில். குட்டி மாநிலத்தில், தி.மு.க.,வை விட, காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகம் என்பதை காரணமாக வைத்து, இந்த ஏற்பாடு. அது உண்மை தான் என்பதால், காங்கிரஸ் தலைமையை, தி.மு.க.,வும் ஏற்றுக் கொண்டது.

ஆனால், இன்று நிலைமை வேறு மாதிரி மாறி விட்டது. பல மாநிலங்களில் ஆட்சியை பறி கொடுத்த காங்கிரஸ், அங்கெல்லாம் அடையாளமே தெரியாமல் தேய்ந்து போனது. வட மாநிலங்களில் துவங்கிய இந்த தேய்பிறை, மெல்ல மெல்ல தெற்கே நகர்ந்து, இன்று புதுச்சேரி வரை வந்து விட்டது.ஆட்சியை இழந்த நாராயணசாமி, தனக்கு வலது கரமாகவும், இடது கரமாகவும் செயலாற்றி வலுசேர்த்த அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் கூடவே இழந்திருக்கிறார்.


அதிக சீட்டுக்காககவர்னர் கிரண் பேடி கொடுத்த குடைச்சலை தாங்க முடியாமல், அவருக்கு எதிராக கோப்புகள் தயாரிக்கும் முயற்சியில் மூழ்கினார், நாராயணசாமி. அந்த முனைப்பில், தன்னோடு இருந்த விசுவாசிகளின் பார்வை வெளியே மேய்வதை பார்க்க தவறி விட்டார். பாரதிய ஜனதா பக்காவாக வேலை செய்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வை வலை வீசி பிடித்தபோதும், முதல்வர் முழுசாக கவனிக்காமல் கோட்டை விட்டார்.

மொத்தத்தில் காங்கிரஸ் இன்று, புதுச்சேரியிலும் கவிழ்ந்து கிடக்கிறது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வேகமாக பயணிக்கும் ஸ்டாலின், இதை கவனிக்க தவறவில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். பாரதிய ஜனதா பாணியில், தி.மு.க.,வும் காய் நகர்த்தியதில், கரை வேட்டி, எம்.எல்.ஏ., ஒருவரும் ராஜினாமா செய்து, காங்கிரஸ் அரசின் வீழ்ச்சியை விரைவுபடுத்தினார்.

ஆட்சியில் இல்லாத காங்கிரசால், தி.மு.க.,வுடன் சரிக்கு சரியாக அமர்ந்து பேரம் பேச முடியாது. புதுச்சேரியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் அதிக சீட்டுக்காக பயமுறுத்த முடியாது. இந்த வியூகத்தை ஸ்டாலின் முன்கூட்டியே தயார் செய்து விட்டார். அதன் வெளிப்பாடு, ஜெகத் ரட்சகன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்த நேரத்தில்கூட, காங்கிரஸ் கண்டு கொள்ளவோ, சுதாரிக்கவோ இல்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போதே, ஒரு தி.மு.க.,காரரை முதல்வராக முன்னிறுத்தி, உள்ளூர் தி.மு.க., தீர்மானம் போடுகிறது என்றால், அதன் விளைவுகளையும், உள்நோக்கத்தையும் ஊடுருவி பார்த்திருக்க வேண்டும் முதல்வர். ஆனால் மேலே சொன்னது போல, கிரண் பேடியின் மல்லுக்கட்டலில் அவர் சோர்ந்து போயிருந்தார்.


ஸ்டாலின் 'பிளான்'கதைக்கு வருவோம். இந்த தேர்தலில், தி.மு.க.,வின் தலைமையை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்கிறது, அறிவாலயம். அதற்கு அடையாளமாக சட்டசபை தொகுதிகளை சரி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்கிறது. இதுவரை மூன்றில் இரு பங்கு காங்கிரஸ் எடுத்துக் கொண்டு, மீதியை தி.மு.க.,வுக்கு கொடுத்து வந்தது. 20:10 பார்முலா.கடந்த, 2006 தேர்தலில், 30 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு 11 ஒதுக்கியது காங்கிரஸ். 2011 தேர்தலிலும் அதே, 11. ஆனால், அடுத்த, 2016 தேர்தலில் அதையும் குறைத்து, ஒன்பது தொகுதிகள் மட்டுமே, தி.மு.க.,வுக்கு வழங்கப்பட்டது. இன்று காங்கிரஸ் பலவீனப்பட்டும், தி.மு.க., வலுவாகவும் இருப்பதால், 20 தந்து விட்டு, 10 எடுத்துக் கொள்ளுமாறு காங்கிரசை கேட்க இருக்கிறது, தி.மு.க., வழக்கம் போல ராகுல் அல்லது சோனியா போன் போட்டு கேட்டால், 15:15 என்ற பார்முலாவுக்கு சம்மதிக்கலாம் என்பது, ஸ்டாலின் பிளான்.

தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற சூழலில், புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவகுமார் - வடக்கு, சிவா எம்.எல்.ஏ., -தெற்கு, நாஜிம் - காரைக்கால் ஆகியோர், சென்னை வந்து அறிவாலயத்தில் ஸ்டாலினை திங்களன்று சந்தித்து பேசினர். புதுச்சேரி, 'லேட்டஸ்ட்' நிலவரம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.தொகுதிகள், 30ல் நமக்கு, 20 லட்சியம்; 15 நிச்சயம் என, ஸ்டாலின் உறுதி அளித்தார் என, புதுச்சேரி தி.மு.க., வட்டாரம் உற்சாகமாக சொல்கிறது. அறிவாலய வட்டாரம் அதை ஊர்ஜிதம் செய்யவில்லை. 'தமிழகத்தில் குறைந்த சீட்டுகளுக்கு காங்கிரசை சம்மதிக்க வைக்க, புதுச்சேரி நிலைமையை தலைவர் பயன்படுத்தி கொள்வார்' என, ஒரு, 'சீனியர்' சொன்னார்.அதற்கு அர்த்தம், புதுவையில் உங்களுக்கு விட்டுக் கொடுத்தால், தமிழகத்தில் எங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது தான்.'டீலா, நோ டீலா?' சீக்கிரம் தெரிந்து விடும்.
வரலாறு முக்கியம் தளபதியாரே...!கோவை மாவட்டம், காரமடையில், ஸ்டாலின் பேசும் போது, ''நீலகிரியில் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க, நடவடிக்கை எடுப்பேன்; இங்கு நிலவும் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காண்பேன்,'' என்றார்.வேடிக்கை என்ன என்றால், மொத்த வியாபாரம் சூடு பிடித்து, தேயிலை விலை கணிசமாக உயர்ந்து, பயிரிடுவோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதே போல, தாறுமாறாக பெய்த மழையால், குளம், குட்டை, ஏரிகள், அணைகள் எல்லாம் நிரம்பி வழிவதால், குடிநீர் பிரச்னை மருந்துக்கும் இல்லை.

குன்னுார் தேயிலை கடந்த ஆண்டு, கிலோ, 70 முதல், 80 ரூபாய் வரை ஏலம் போனது. அதுவே, இந்த ஆண்டு, 130ல் இருந்து, 150 வரை ஏற்றம் கண்டுள்ளது. பசுந்தேயிலைக்கு கடந்த ஆண்டு, 12 ரூபாய் கிடைத்தது; இந்த ஜனவரியில் 23க்கு போயிருக்கிறது. பல ஆண்டுகளாக, குடிநீர் தட்டுப்பாடு நிலவிய குன்னூர் நகராட்சியில் மாதம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஒரு குடம் தண்ணீரை, 10 ரூபாய் கொடுத்து வாங்கிய பெண்கள், அடிக்கடி சாலை மறியல் செய்தனர். இப்போது, எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு, நகராட்சியில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. திண்டாட்டமும் இல்லை; போராட்டமும் இல்லை. ஸ்டாலினுக்கு பழைய படம் போட்டுக் காட்டிய புதியவர்கள் யாரென்று தெரியவில்லை!

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-பிப்-202109:25:40 IST Report Abuse
Bhaskaran Pathinainchu நாள் நாராயணசாமி இவ்வளவு தத்தி யாக இருந்திருக்கிறாரே
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
25-பிப்-202116:22:04 IST Report Abuse
Balaji இவரு அந்தளவுக்கு ஒர்த்தா தேரிலியேபா...ஹி ஹி,,,
Rate this:
Cancel
JSR - Tirunelveli,இந்தியா
25-பிப்-202113:26:47 IST Report Abuse
JSR Tamil
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X