நிரவ் மோடி நாடு கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹாராஷ்டிராவின், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றார், வைர வியாபாரி நிரவ் மோடி, 49. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் கைது
 Will Nirav Modi Be Extradited? Big UK Court Verdict Today


லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிராவின், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றார், வைர வியாபாரி நிரவ் மோடி, 49. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.


இன்று தீர்ப்பு



latest tamil news


அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளன. இதற்கான வழக்கு விசாரணை, பிரிட்டன் 'வெஸ்ட்மினிஸ்டர்' நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்தாண்டு செப். 7 க்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்த போது பிப். 25-ல் தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி சாமுவேல் கூஸ் தீர்ப்பை வாசிக்கிறார். இதில் நிரவ் மோடி நாடுகடத்த உத்தரவிடப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
25-பிப்-202110:32:04 IST Report Abuse
Raj இவர் வரமாட்டார் இந்தியாவுக்கு எந்த ஜென்மத்திலும். குஜராத் ஆள் ஆச்சே. Lalit மோடியும் எஸ்கேப். மேலிடத்தில் Narendra மற்றும் Amit அரசாங்கம்.
Rate this:
Cancel
25-பிப்-202110:15:36 IST Report Abuse
ஆரூர் ரங் சோனியா மட்டும் ஆட்சியில் தொடர்ந்திருந்தா இவன் மட்டுமல்ல. தாவூத், சோக்சி , மல்லய்யா எல்லாம் இங்கேயே நிம்மதியா சொகுசா வாழ்ந்து கொன்டிருப்பாங்க. குத்ரோச்சி, ஆன்டர்சன்னை அரசு மரியாதையோடு அனுப்பி வெச்ச கூட்டமாச்சே 👹 மோதிக்கு பயந்து ஓடிட்டாங்க . பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுவான்
Rate this:
Cancel
25-பிப்-202110:10:15 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திய குற்றவாளிகளுக்கு பெஸ்ட் புகலிடம் இங்கிலாந்து. வந்தாரை(👹) வாழவைத்து இந்தியாவை பிளாக் மெயில் செய்கிறார்கள். ஒவ்வொரு குற்றவாளி விடுதலைக்கும் நாலு ஓட்டை ஹெலிகாப்டர் ஆயுதம் நாம் வாங்கினா அனுப்பிவைப்பார்கள். காசுக்கு ஆட்கடத்தல் அந்நாட்டுக்குப் புதிய தொழில் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X