புதுடில்லி :''வாக்காளர்களை அனைவரும் மதிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். கேரளாவில், ராகுல் பேசியதை விமர்சிக்கும் வகையில், கபில் சிபல் கூறியுள்ளது, காங்., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுமை
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, காங்., எம்.பி., ராகுல், ''நான், 15 ஆண்டுகள், வட மாநிலத்தில், எம்.பி., யாக இருந்துள்ளேன். அங்கு வித்தியாசமான அரசியல் உள்ளது. கேரளாவுக்கு வரும்போது புதுமையாக உணருகிறேன். இங்குள்ள மக்கள், எந்தப் பிரச்னையையும் மிகவும் ஆழமாக பார்க்கின்றனர்,'' என்றார்.
![]()
|
மதிக்க வேண்டும்
இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான கபில் சிபல் கூறியதாவது:
வாக்காளர்களை அனைவரும் மதிக்க வேண்டும். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என, முடிவு செய்பவர்கள், அவர்கள் தான்.வட மாநில எம்.பி.,யாக இருந்தேன் என கூறியதை பற்றி, ராகுலிடம் தான் கேட்க வேண்டும். எந்த சூழ்நிலையில், அவர் அப்படி கூறினார் என, தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE