சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட் அப்

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. சாராயம் விற்ற இருவர் கைதுநெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வீரமணி சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த முத்து, 25; ரபில்தாஸ், 22; ஆகியோரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல்

தமிழக நிகழ்வுகள்

1. சாராயம் விற்ற இருவர் கைது
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வீரமணி சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த முத்து, 25; ரபில்தாஸ், 22; ஆகியோரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.latest tamil news2. கடலுார் மாவட்டத்தில் 50 ரவுடிகள் திடீர் கைது
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட 50 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழகம் முழுதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடலுார் உட்கோட்டத்தில் 9 பேர், சிதம்பரம் 5, விருத்தாசலம் 3, நெய்வேலி 12, சேத்தியாத்தோப்பு 9, பண்ருட்டி உட்கோட்டத்தில் 12 பேர், என 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3. அண்ணனை தாக்கிய தம்பிக்கு 2 ஆண்டு சிறை
செஞ்சி : அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


latest tamil news4. மதுரையில் போலி தங்கக்காசுகள் கொடுத்து ரூ.3.80 லட்சம் மோசடி
மதுரை: மதுரையில் 300 போலி தங்ககாசுகள் கொடுத்து ரூ.3.80 லட்சம் பெற்று மோசடி செய்த சேலம் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். இத்தம்பதி வேறு மாவட்டங்களிலும் மோசடி செய்துள்ளார்களா என விசாரித்து வருகிறோம் என போலீசார் கூறினர்.


latest tamil news


Advertisement


5. ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.58 ஆயிரம் அபேஸ்
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் அருகே, ஓய்வு பெற்ற ஆசிரியரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.58 ஆயிரம் நுாதன முறையில் அபேஸ் செய்யப்பட்டது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதால், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news
6. பெண் ஐ.பி.எஸ்.க்கு பாலியல் தொல்லை
சென்னை :பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க திட்டப்பணிகள் துறை கூடுதல் முதன்மை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் ஐ.ஜி. அருண் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய நிகழ்வுகள் :


வங்கதேச நபர் சிக்கினார்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தின், முர்ஷிதாபாத் ரயில் நிலைய நடைமேடையில், சமீபத்தில் நடந்த, குண்டு வெடிப்பில், ரயிலுக்கு காத்திருந்த, அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் உசேன் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம், விசாரணை தொடர்கிறது.


latest tamil newsமாவட்ட நீதிபதி 'சஸ்பெண்ட்'
நைனிடால்: உத்தரகண்டின் அல்மோரா மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அபிஷேக் குமார் ஸ்ரீவத்சவா. இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு சொந்தமான வாகனங்களில், நீதிபதியின் குடும்பத்தினர் டில்லி, காஜியாபாத், நொய்டா நகரங்களுக்கு இலவசமாக பயணித்துள்ளதை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, நீதிபதி அபிஷேக் குமார் ஸ்ரீவத்சவா நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


latest tamil news
உலக நடப்பு


பாக்.,கில் தலிபான் அமைப்புக்கு சரணாலயம்
வாஷிங்டன்: “பாகிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் சரணாலயம் உள்ளது,” என, அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி ஜோசப் டன்போர்டு கூறினார்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரியான ஜோசப் டன்போர்டு, கூறியதாவது: பாகிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் சரணாலயம் இருப்பதை, நாம் அறிவோம். ரஷ்யா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு, அவர்கள் பயணம் மேற்கொள்வதையும் அறிவோம். அந்த அமைப்பினருக்கு, ஆயுதங்களை வழங்கி, ஈரான் உதவி இருக்கிறது. போதைப் பொருள் வர்த்தகம் வாயிலாக, தலிபான் அமைப்பினர், தங்கள் நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X