பொது செய்தி

இந்தியா

அதிக கட்டணம் ஏன்? ரயில்வே விளக்கம்!

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி : சிறப்பு ரயில்களாக இயக்கப்படும், குறுகிய தொலைவு பயணியர் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், 'தேவையில்லாத பயணத்தை தடுக்கவே, கட்டணம் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ரயில்வே கூறியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலின்போது, நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டபோது,

புதுடில்லி : சிறப்பு ரயில்களாக இயக்கப்படும், குறுகிய தொலைவு பயணியர் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், 'தேவையில்லாத பயணத்தை தடுக்கவே, கட்டணம் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ரயில்வே கூறியுள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் பரவலின்போது, நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டபோது, சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. முதலில் நீண்ட துார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது, குறுகிய தொலைவு ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த குறுகிய தொலைவு சிறப்பு ரயில்களுக்கானகட்டணம் அதிகமாக உள்ளதாக, பல்வேறு தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள விளக்கம் : கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும்தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும்எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவும். இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
25-பிப்-202117:09:46 IST Report Abuse
vnatarajan நிர்வாகம் கூறுகிற காரணம் சரியாக தோன்றவில்லை. பயணிகளை எப்படி தேவைக்காக அல்லது தேவையில்லாமல் பயணிப்பவர்கள் என்று பிரித்து கட்டணம் வசூலிக்கமுடியும். ஆகையால் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவுயில்லா கட்டணத்தை வசூலிக்காமல் சாதாரண ரயிலின் கட்டணத்தையே எல்லோருக்கும் வசூலிக்கவேண்டும்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
25-பிப்-202116:59:11 IST Report Abuse
Rajas இதை விட சிறப்பான திட்டம் ஒன்று இருக்கிறது. மாஜிக் நிபுணர் சர்க்கார் குடும்பத்தினர் ஒரு முறை தாஜ்மஹாலையும் ஒரு ட்ரைனையும் மேஜிக்கால் மறைய வைத்தனர். ரயில் டிரைவர்களை ஜூனியர் சர்காரிடம் ட்ரைனிங் கொடுத்து ரயில்களை மறைய வைக்கலாம். மக்கள் ஏமாந்து போவார்கள். மக்கள் போன பின்பு திரும்பவும் கொண்டு வரலாம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
25-பிப்-202116:29:11 IST Report Abuse
Rajas ரயில் ஓட்டுபவருக்கு வழி தெரியாது, ரயில் காணாமல் போய் விட்டது, ரயிலில் கரண்ட் இல்லை, ரயில் ஓட்டுபவருக்கு 6 மணிக்கு பின் கண் பார்வை சரியிருக்காது, யாரோ தண்டவாளத்தை வேறு ஊருக்கு மாற்றி வைத்து விட்டார்கள் என்று பல காரணங்களை சொல்ல ஆரம்பித்து விட்டால் மக்கள் பயந்து வர மாட்டார்கள். அப்படியும் யாரவது வந்தால் ரயிலில் நேம் போர்டு, நம்பர் போர்டு வைக்காதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X