அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் மோடி நிகழ்த்தப்போகும் 'மாயாஜாலம்'

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (101)
Share
Advertisement
''முதல் வாக்குகள், பசுமையான நினைவுகளை, தரும்; முதல் வாக்குகளை, தேச நலனுக்காக, விவசாயிகளின் நலனுக்காக செலுத்துங்கள்...''கடந்த லோக்சபா தேர்தலின்போது, கோவையில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி, இளம் வாக்காளர்களுக்கு, வாழ்த்துகளை தெரிவித்து பேசினார்.கோவையில், இன்று, அதே 'கொடிசியா' மைதானத்தில், மீண்டும் பேச உள்ளார். இளையோர் மட்டுமின்றி, அனைத்து
கோவை, மோடி, பிரதமர் மோடி, மாயாஜாலம், ராகுல், ஜிஎஸ்டி, பொதுக்கூட்டம், பாஜ, பா.ஜ.,

''முதல் வாக்குகள், பசுமையான நினைவுகளை, தரும்; முதல் வாக்குகளை, தேச நலனுக்காக, விவசாயிகளின் நலனுக்காக செலுத்துங்கள்...''கடந்த லோக்சபா தேர்தலின்போது, கோவையில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி, இளம் வாக்காளர்களுக்கு, வாழ்த்துகளை தெரிவித்து பேசினார்.

கோவையில், இன்று, அதே 'கொடிசியா' மைதானத்தில், மீண்டும் பேச உள்ளார். இளையோர் மட்டுமின்றி, அனைத்து வாக்காளருக்கும், மோடி என்ன சொல்லப்போகிறார் என்பதில், ஆர்வம் மிகுந்திருக்கிறது.''தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், இது தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமாக அமையும்,'' என்று, பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன், ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.


கொண்டாட்டமும், ஆதங்கமும்கோவை மற்றும் திருப்பூர் , பா.ஜ.,வுக்கு 'ஓட்டு வங்கி' உள்ள மாவட்டங்கள்; சென்னையைக் காட்டிலும், கோவையில், மோடி கூட்டம் என்றால், அது, பா.ஜ.,வினருக்கு கொண்டாட்டமானதாக இருக்கிறது. அதேசமயம், தமிழகம் முழுதும், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு இணையான, 'ஓட்டு வங்கி'யைப் பெற்றாக வேண்டும் என்ற முயற்சியில், பா.ஜ., இன்னும் முன்னேறவில்லை என்ற ஆதங்கம், கட்சியினரிடம் கலந்திருக்கிறது.கடந்த லோக்சபா தேர்தலை தொடர்ந்து, கட்சியில் பிரபலங்கள் பலர் சேர்ந்திருக்கின்றனர். ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த அண்ணாமலையில் துவங்கி, காங்., பாரம்பரியத்தில் ஊறிய நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் வரை, பா.ஜ.,வில் சேர்ந்திருக்கின்றனர். 'வேல் யாத்திரை' உள்ளிட்டவையும், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றிருக்கிறது. இனி, அதில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.


'கவர்ச்சி' அறிவிப்பு இருக்காதுகோவையில், பிரதமர், தொண்டர்களின் குரலாக ஒலிக்கப்போகிறாரா, வாக்காளர்களின் மனதை கொள்ளை கொள்ளப்போகிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ, பிரசார மேடை என்றாலே, இலவச அறிவிப்புகள், கவர்ச்சியாக எழும்.இலவசம் என்னும்போதே, அது தங்களிடம் இருந்து பிடுங்கி, தங்களிடமே தருவது என்பதை, தமிழக மக்கள், நன்கு உணரத் துவங்கியிருக்கின்றனர். மோடியின் பேச்சில், இத்தகைய அறிவிப்புகள் எழப்போவதில்லை. தமிழகம் சார்ந்த திட்டங்கள் என்றாலும், அதில்,தேசியம் சார்ந்த முக்கியம் கொண்டதாக, மோடியின் குரல் ஒலிக்கப்போகிறது என்பது நிச்சயம்.


latest tamil news
ராகுலுக்கு பதில் சொல்வாரா!காங்., முன்னாள் தலைவர் ராகுல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பிரசாரம் செய்து சென்றுள்ளார்.''ஜி.எஸ்.டி.,யால் தொழில்துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.,வின் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையால் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். மோடி தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, கலாசாரத்தையோ மதிப்பதில்லை. தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பிரதமர் மோடி கருதுகிறார். மோடி மக்களுக்கு சொந்தமானதை விற்க முயற்சி செய்கிறார். விவசாயிகளின் உரிமையை வேளாண் சட்டங்களால் பறிக்க நினைக்கிறார்,'' என்று பிரதமர் மோடி மீதான தாக்குதலையே, ராகுலின் பெரும்பாலான வார்த்தைகள் கொண்டிருந்தன.ராகுலை குறிப்பிட்டு, கோவை கூட்டத்தில், மோடி, பதில் அளிக்கப்போவதில்லை. ஜி.எஸ்.டி.,யோ, வங்கி நடைமுறையோ, வேளாண் சட்ட சீர்திருத்தங்களோ... ராகுலின் கருத்துகளில் உண்மையில்லை என்பதை, 'நெத்தியடி'யாய் மோடி, 'சிதறு தேங்காய்' போல், உடைத்தெறியப் போகிறாரா... இல்லை... அதற்கான பதிலை, மக்களிடமே விட்டுவிடுகிறாரா என்பது, இன்று தெரியும்.


எது மாயாஜாலம்!கொரோனா பரவலுக்கு பின், பல்வேறு பாதிப்புகளைப் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் சந்தித்துள்ள நிலையில் நடைபெறுவதாக சட்டசபை தேர்தல் உள்ளது. பொருளாதார மீட்பும், மக்களின் எதிர்கால வளமான வாழ்வும் தான் முக்கியமான விஷயங்கள்.'சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்வதே, நோக்கம்' என்று, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் கூறியிருக்கிறார். இது பெரிய இலக்கல்ல என்றாலும், தமிழகத்தில், பா.ஜ., வேரூன்றுவதற்குத் தேவையான இலக்கென்பது மோடிக்கும் தெரியும். வார்த்தைகளால் கட்டமைத்துவிட்டு, செயல் கட்டமைப்பில், மோடியின் 'மாயாஜாலம்' எப்போதும் மாயமாவதில்லை. கோவை பொதுக்கூட்டத்தில், இத்தகைய 'மாயாஜாலம்' நிகழும்; வார்த்தைகள் தொண்டர்களைக் கட்டிப்போடும்; செயல்கள், தமிழகத்தை ஈர்க்கும் என்பது நிச்சயம்.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
25-பிப்-202120:07:29 IST Report Abuse
mrsethuraman  தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் சுட்டு வீழ்த்த படுகின்றனர் . சிவகாசியில் அடிக்கடி பட்டாசு வெடித்து தொழிலாளர்கள் சிறுவர்கள், இறக்கின்றனர் . கழிவு நீர் சுத்தம் செய்யும் தொழிலாளி அடிக்கடி விஷ வாயு தாக்கி இறக்கிறார். கால காலமாய் தொடர்ந்து வரும் இப்பிரச்சனைகளை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை .
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
26-பிப்-202112:45:36 IST Report Abuse
Dr. Suriyaகாசுக்கு ஓட்டுன்னு விக்காம இருந்தால் கேள்வி கேட்கலாம்?....காச கண்ணுல காமிச்சாதானே ஓட்டு சாவடிக்கே நடக்க தொடங்குறானுவோ இதுல பெண்கள் ஆண்களுன்னு வித்தியாசம் கிடையாது ...இப்போ வார்டுக்கு காசு வரலைன்னு போராட்டம் பண்றதே பொம்பளைங்கத்தான்... கேவலமான பிறவிகள் இருக்கும் போது இப்படி எல்லாம் கேட்க முடியாது.......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-பிப்-202117:57:10 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாடு வாக்காளர்கள் ஏமாந்த சோணகிரிகள். திமுக சொல்வதை வேதவாக்காக ஏதுத்துக்கொள்வார்கள். எது உண்மை என்று அவர்கள் அறிவுக்கு எட்டாது.
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
25-பிப்-202117:24:37 IST Report Abuse
திராவிஷ கிருமி தேசவிரோத சொங்கிகளின் கூக்குரல் ஓலம் இங்கே நன்றாகவே கேட்கிறது.... மோடிஜி பெயரை கேட்டாலே.... ச்சும்மா அதிருதில்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X