பொது செய்தி

தமிழ்நாடு

"புஸ்" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்த நிலையில், பல இடங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், இன்று (பிப்.,25) முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்தன. ஆனால், 'அனைத்து
Tamilnadu, BusStrike, Transport, தமிழகம், பஸ் ஸ்டிரைக், பஸ்கள்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்த நிலையில், பல இடங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், இன்று (பிப்.,25) முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்தன. ஆனால், 'அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்; இல்லையெனில், சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரித்தனர்.


latest tamil news



இருந்தாலும், பஸ்கள் வழக்கம்போல் ஓடுமா என்பது குறித்து குழப்பம் நீடித்தது. இந்நிலையில், இன்று காலை முதல் பல மாவட்டங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பணிமனைகளில் குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமமின்றி சென்றனர். இதனால், பஸ் ஊழியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் பிசுபிசுத்துப்போனது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202104:25:21 IST Report Abuse
தல புராணம் புஸ் ஆகி போனது போக்குவரத்து ஊழியர்களின் வாழ்க்கையும் தான்.. பாவம்..
Rate this:
Cancel
Nalla Paiyan - karaikal,இந்தியா
25-பிப்-202121:00:36 IST Report Abuse
Nalla Paiyan எலக்ஷன் வருதுல்ல.இனிமேல் ஸ்ட்ரைக், மறியல், போராட்டம்ன்னு இந்த தொழிற்சங்கத்துக்காரனுங்க அடாவடி அதிகமா இருக்கும்.......
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-பிப்-202119:03:12 IST Report Abuse
r.sundaram திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்கு தினமும் வேலைக்கு சென்று வருபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். தற்போது பயணிகள் ரயில் இல்லாததால் இவர்கள் பஸ் பயணத்தையே தற்போது நம்பி இருக்கின்றனர். காலியில் திருநெல்வேலியில் பல பாகங்களில் இருந்து இவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் புது பஸ்ஸ்டாண்ட் வருகின்றனர். இரவில் திரும்பும் போது ஓட்டுநர், நடத்துனர் வண்டியை புது பஸ்ஸ்டாண்டில் நிறுத்த மறுக்கின்றனர். இதனால் தற்காலிக பேருந்து நிருத்த்தத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்களது இருசக்கர வாகனங்களை எடுக்க வேண்டி இருக்கிறது. இரவு நேரத்தில் புது பஸ்ஸ்டாண்ட் பக்கம் சாலையை கடப்பதும் ஆபத்தான ஓன்று. ஆதலால் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நடத்துனர் ஓட்டுனரை புது பஸ்ஸ்டாண்டில் வண்டியை நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X