அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறிவாலயத்தில் விருப்ப மனு பெற குவிந்த தி.மு.க.,வினர்; சாலையில் நிறுத்திய வாகனங்களால் நெருக்கடி

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை: சுபமுகூர்த்த நாள் என்பதால், தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற, அ.தி.மு.க.,- தி.மு.க., - பா.ம.க., ஆகிய தலைமை அலுவலகங்களில், ஆயிரக்கணக்கானோர் நேற்று குவிந்தனர். கட்சியினர் தங்கள் வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தியதால், சென்னை, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஸ்தம்பிப்புசட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து,
திமுக, விருப்பமனு, அறிவாலயம், போக்குவரத்து நெரிசல்

சென்னை: சுபமுகூர்த்த நாள் என்பதால், தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற, அ.தி.மு.க.,- தி.மு.க., - பா.ம.க., ஆகிய தலைமை அலுவலகங்களில், ஆயிரக்கணக்கானோர் நேற்று குவிந்தனர். கட்சியினர் தங்கள் வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தியதால், சென்னை, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


ஸ்தம்பிப்பு


சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்தே வெளியூர்களிலிருந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆதரவாளர்களுடன், விருப்ப மனு அளிப்பதற்காக சென்னைக்கு படையெடுத்து வந்தனர். சுபமுகூர்த்த நாள், நல்ல நாள் என்பதால், விருப்ப மனு வாங்கவும், அதை பூர்த்தி செய்து வழங்கவும், ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர், நேற்று, சென்னை அறிவாலயத்தில் குவிந்தனர்.


latest tamil news


தி.மு.க.,வினர் வந்த வாகனங்கள் அனைத்தும், அறிவாலயம் அமைந்துள்ள அண்ணாசாலையின் இருபுறங்களிலும், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் தீவுத்திடல் - சைதாப்பேட்டை வரையிலான அண்ணாசாலையில், போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது. சேமியர்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, எல்டாம்ஸ் சாலை, டி.டி.கே.சாலை உள்ளிட்ட பல பிரதான சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தவித்தனர்.

மேலும், அவசர சேவை வாகனங்களும் நெரிசலில் சிக்கி, உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. தேனாம்பேட்டை நந்தனம், ஜெமினி மேம்பாலத்தை வாகனங்கள் கடப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலானது. சென்னை, ராயப்பேட்டை அ.ம.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு குவிந்த அ.ம.மு.க.,வினரின் வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டதால், ராயப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
25-பிப்-202120:09:11 IST Report Abuse
sridhar எப்போதுமே திமுகவால் பொதுமக்களுக்கு நெருக்கடி தான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-பிப்-202117:53:32 IST Report Abuse
J.V. Iyer கொள்ளைக்காரர்களுக்கும், ரவுடிகளுக்கு இந்த கட்சியில் குறைச்சல் இல்லை.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
25-பிப்-202117:47:42 IST Report Abuse
வல்வில் ஓரி வேர்வை இல்லாத சோறு திங்கணும்னா உடனே நாடவும் அறிவாலயம்
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
25-பிப்-202119:19:14 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் அப்போ நீ எப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X