பொது செய்தி

இந்தியா

அரசு கேட்கும் தகவலை தர மறுத்தால் சிறை: சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: அரசு மற்றும் நீதிமன்றங்கள் கேட்கும் தகவல்களை சமூக வலைதளங்கள் தர மறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:* பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார்
சமூக வலைதளங்கள், ஓடிடி, மத்திய அரசு,  நீதிமன்றம், சிறை,

புதுடில்லி: அரசு மற்றும் நீதிமன்றங்கள் கேட்கும் தகவல்களை சமூக வலைதளங்கள் தர மறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர்.


latest tamil news
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

* அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும்.

* நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு உத்தரவு கிடைத்த 36 மணி நேரத்தில் ஆட்சேபனைக்குரிய அல்லது சட்ட விரோதமான கருத்துகளை சமூக வலைதளங்கள் முடக்கம் அல்லது நீக்க வேண்டும்.

* ஒரு செய்தியை பரப்பும் முதல் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.

* சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்காக, விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும்.

* வாடிக்கையாளர்களின் புகார்களை பெறவும்,விசாரணை நடத்தவும் தனி அதிகாரி ஒருவரை சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும்

* சட்டவிரோதம் அல்லது ஆட்சேபனைக்குரிய விஷயங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

* விதிமுறை மீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசு மற்றும் நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

* ஒருவரின் கணக்கை நீக்கினால், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

* ஓடிடி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

* நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்கென்று சில வரைமுறைகளும் உள்ளது.

* ஓடிடி தளங்கள் 13+, 16+, வயது வந்தவர்களுக்கு மட்டும் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.

* தவறான தகவலை பரப்பும் முதல் நபர் யார் என்பதை சமூக வலைதள நிறுவனங்கள் கண்டறிய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
25-பிப்-202122:57:26 IST Report Abuse
Thirumurugan இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்து - இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுகிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றாலும் எதுவும் பேசக்கூடாது, அப்படித்தானே...ஏனென்றால் இலங்கை நட்பு நாடு அல்லவா?
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
25-பிப்-202121:12:05 IST Report Abuse
Arul Narayanan Why to waste time in law, case, trial, vaidha and no punishment. All these unnecessary social media platforms must be banned outright.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-பிப்-202120:26:44 IST Report Abuse
Rajagopal நல்லது. ரோட்டில் வண்டியைக் கோணாமானாக ஓட்டினால் விபத்துகள் அதிகம். அதற்காக விதிமுறைகளும், அபராதங்களும் கடுமையாக்கப் படுவதைப்போல, சமூக வலை தளங்களுக்கும் கட்டுப்பாடு அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X