பெட்ரோல் விலை கிடுகிடு: மின்சார ஸ்கூட்டரில் சென்ற மம்தா

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
கோல்கட்டா: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மின்சார வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக்
Mamata Banerjee, Modi Government, Sells Everything, WestBengal, மம்தா,மம்தா பானர்ஜி, மேற்குவங்கம், முதல்வர், மோடி அரசு, விற்பனை

கோல்கட்டா: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மின்சார வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஆர்பாட்டம் நடத்தினார். பெட்ரோல் விலையுயர்வைக் கண்டிக்கும் வகையில் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.


பின்னர் அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி அரசின் செயல்பாடு இது தான். இது மக்களை வஞ்சிக்கும் அரசு. மோடி அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்கிறது. பி.எஸ்.என்.எல்., முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரசு இளைஞர்களுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-பிப்-202100:05:28 IST Report Abuse
தமிழவேல் கோவையில் 1000 பெட்ரோல் வண்டியும், புதுவையில் 500 பெட்ரோல் வண்டியும், ஊர் முழுசும் புகையை விட்டுகிட்டு ஊர்வலம் வந்தபோது (அதுவும் ஹெல்மெட் இல்லாம) இவனுவோளாம் எங்கே போனானுவோ ? 🤔
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-பிப்-202121:01:10 IST Report Abuse
Ramesh Sargam "ஒரு நாடகம் அன்றோ நடக்கிறது". ஏனோ இன்று ஓர் நாள் மின்சார ஸ்கூட்டரில் சென்று நாடகமாடிவிட்டார் இந்த நாடக காரி. தினமும் இப்படி மின்சார ஸ்கூட்டரில் செல்வாரா...?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-பிப்-202119:40:52 IST Report Abuse
vbs manian ஏன் இவர் தன அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வாட் வரியை முற்றிலும் நீக்கலாமே.வருவாய் இழப்பால் ஆட்சி பறி போய் விடும். அந்த பயம்.இந்தியாவில் செலவுக்கு ஏற்ற வருமானம் உற்பத்தி இல்லை.மக்கள் தொகை கட்டுக்குள் வர வேண்டும். குடும்ப கட்டுப்பாடு பற்றி விழுப்புணர்ச்சி மக்களிடையே வர வேண்டும். சீனா இந்த விஷயத்தில் சாதித்து காட்டியுள்ளது. ஜனத்தொகை கட்டுப்படாத வரை விமோச்சனம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X