பொது செய்தி

தமிழ்நாடு

திட்டங்களினால் தமிழகம் பயன்பெறும்: பிரதமர் மோடி

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: கோவை: தற்போது துவங்கப்பட்ட திட்டங்களினால், ஒட்டுமொத்த தமிழகமும் பயன்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.கோவை மாவட்டம் கொடிசியா அரங்கில் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் பிரதமர்
பிரதமர் மோடி, அரசு திட்டங்கள், கோவை,

புதுடில்லி: கோவை: தற்போது துவங்கப்பட்ட திட்டங்களினால், ஒட்டுமொத்த தமிழகமும் பயன்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டம் கொடிசியா அரங்கில் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news
இந்த விழாவில் பிரதமர் மோடி,

* திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி பகுதியில் 1,280 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருக்குமரன் நகர் பகுதியில் 1,248 அடுக்குமாடி குடியிருப்புகள்

*மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியில் 1,088 அடுக்குமாடி குடியிருப்புகள்

*திருச்சியில் இருங்களூர் பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள்,

*தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்பு சாலை விரிவாக்க பணிகள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.


latest tamil news
*நெய்வேலியில் புதிய 2*500 மெகாவாட் அனல் மின் திட்டம், தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன

*கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் , 8 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.பெருமை

மிகப்பெரிய தொழில் நகரமான கோவையில் இருப்பது மகிழ்ச்சி. இது தொழில் நகரம். புதுமைகள் படைக்கும் நகரம். கோவைக்கும், தமிழகத்திற்கும் நன்மை பயக்கும் வளர்ச்சி திட்டங்களை துவக்கியுள்ளோம். பவானி சாகர் அணையை நவீனப்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் ஏக்கர் அதிகமான நிலம் நீர்பாசன வசதி பெறும். ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்கள் பயன்பெறும். விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் முக்கியம். வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதில் பெருமைப்படுகிறேன். 3 ஆயிரம் கோடி ரூபாயில் 709 மெகாவாட் சூரிய மின்சாரத்திட்டம் மூலம் 4 மாவட்டங்கள் பயன்பெறும். நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 65 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்படும்.


புதிய பூங்கா

கடல்சார் வணிகம் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது தமிழகம். கப்பல் போக்குவரத்தில் வ.உ.சிதம்பரத்தின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. வஉசி துறைமுகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் 2015 முதல் 2035ம் ஆண்டு வரையில் 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. துறைமுகங்களை நவீனமயமாக்கல், துறைமுகங்கள் உருவாக்கல், துறைமுகம் தொடர்புடைய தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை அடங்கும். ஸ்ரீபெரும்பதூர் அருகே மப்பேட்டில் சரக்குகளை கையாள புதிய பூங்கா அமைக்கப்படும். நம் மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் துவக்கம். இதன் ஒரு பகுதியாக 332 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4,114 வீடுகளை திறந்து வைத்தததை பெருமிதமாக கருதுகிறேன்.


உந்துசக்தி

தமிழகம் அதிக நகர்ப்புறங்களை கொண்ட மாநிலம். நகர்ப்புற வளர்ச்சியில் அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. தனிநபரின் கண்ணியத்தை உறுதி செய்வதே வளர்ச்சியின் மையக்கரு. வளர்ச்சியின் முக்கிய பங்காக அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டங்களினால் தமிழகத்தின் வாழ்த்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் உந்துசக்தியாக விளங்கும். தற்போது துவங்கப்பட்ட திட்டங்களினால், ஒட்டு மொத்த தமிழகமும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்


- என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கொள்காட்டி பேசினார். இதன் பொருள், ‛உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே,' என்பதாகும்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202103:58:57 IST Report Abuse
தல புராணம் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.. இடிக்கிறது ராமர் கோவில்..
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
26-பிப்-202103:30:07 IST Report Abuse
Ram ஒபெநிங் எல்லாம் நல்லா இருக்கு ...ஆனா உங்ககிட்ட பினிஷிங் சரியெல்லயே - (aims..., ) - Vadivel comedy
Rate this:
Cancel
26-பிப்-202100:23:20 IST Report Abuse
ஆப்பு மதுரை எய்ம்ஸ் திட்டத்திலே ஏற்கனவே 8 கோடி தமிழர்கள் பயனடைஞ்சாச்சு.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202108:58:11 IST Report Abuse
தல புராணம்அடேங்கப்பா, அம்புட்டு பேருமா.. சொல்லவே இல்லே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X