டிரம்ப் விதித்த விசா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜோ பைடன்

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மும்முரம் காட்டிவருகிறார். இதனை அடுத்து எச்1-பி விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை எளிதாக்கினார்.இது அமெரிக்க குடியேறிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஜோ பைடனின் பாட்டனார், அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு
Joe Biden, Revokes, Green Card Applicants, Trump Ban, Visa, ஜோ பைடன், விசா, கட்டுப்பாடுகள், டிரம்ப்

வாஷிங்டன்: ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மும்முரம் காட்டிவருகிறார். இதனை அடுத்து எச்1-பி விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை எளிதாக்கினார்.

இது அமெரிக்க குடியேறிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஜோ பைடனின் பாட்டனார், அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர். மூன்று தலைமுறையாக அமெரிக்காவில் வசித்துவரும் பைடன் குடும்பம் எப்போதும் குடியேறிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. இதனாலேயே ஜனநாயக கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஜோ பைடன் கடந்த 50 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.


latest tamil news


பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி பணிசெய்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் முதல் சுயதொழில் முனைவோர்வரை அனைவருக்கும் முந்தைய டொனால்ட் டிரம்ப் அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே..!' என்ற கொள்கை கொண்ட குடியரசுக் கட்சி ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்க அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது ஜோ பைடன் ஆட்சியில் முந்தைய டிரம்ப் ஆட்சியில் நிரந்தர குடியுரிமைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதனால் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஜோ பைடனின் இந்த முயற்சிக்கு அமெரிக்க சிறுபான்மையினர் அதிக வரவேற்பை அளித்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் பணி செய்துவரும் வெளிநாட்டவர்களது குடும்பங்கள் அமெரிக்காவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாவுக்கு டொனால்ட் டிரம்ப் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தார்.


latest tamil news



அமெரிக்காவில் பிற நாட்டவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் புகாமல் இருப்பதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் காரணம் கூறினார். இதனால் பல குடும்பங்கள் பிரிந்து உள்ளன என்றும் விசா கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்றும் அப்போதே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோ பைடன் வலியுறுத்தி வந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் குறைந்துள்ளதால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் விசா கட்டுப்பாடுகளை ஜோ பைடன் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதீத விசா கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கத் தொழில்துறை மந்தம் அடைவதாக ஏற்கனவே கலிபோர்னியா நீதிமன்றம் முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
26-பிப்-202107:09:12 IST Report Abuse
MANIAN K சீனா ஆட்களை குடியேறவிட்டால் பத்து ஆண்டுகளில் யு எஸ் ஏ கம்மிகள் வசம் வரும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-பிப்-202117:38:24 IST Report Abuse
Bhaskaran பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதம் வளர்க்கும் நாடுகளிலிருந்து வருபவர்கள் மேல் ஒரு கண் வைத்திருக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X