நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதற்கு தடையில்லை என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவின், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றார், வைர வியாபாரி நிரவ் மோடி, 49. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
NiravModi, Extradited, India, Britain, Court, நிரவ்மோடி, இந்தியா, நாடு கடத்த, தடையில்லை, பிரிட்டன், நீதிமன்றம், நீதிபதி, உத்தரவு, தீர்ப்பு

லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதற்கு தடையில்லை என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றார், வைர வியாபாரி நிரவ் மோடி, 49. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளன. இதற்கான வழக்கு விசாரணை, பிரிட்டன் 'வெஸ்ட்மினிஸ்டர்' நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்தாண்டு செப். 7 க்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.


latest tamil news




கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்த போது பிப். 25-ல் தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சாமுவேல் கூஸ் தனது தீர்ப்பில் கூறியதாவது: நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது.


latest tamil news



நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடி மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
26-பிப்-202110:17:27 IST Report Abuse
நக்கீரன் அருமை அருமை. களி திங்க வாருங்கள் கொள்ளைக்கார நீரவ் மோடி அவர்களே.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
26-பிப்-202103:51:01 IST Report Abuse
blocked user இன்னும் மேல் முறையீடு, கீழ் முறையீடு போன்ற விவகாரங்கள் பிரிட்டனிலும் உண்டு. சீக்கிரம் இந்தியா கொண்டுவந்து நாலு நாள் சாப்பாடில்லாமல் அடைத்துப்போட வேண்டும்...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
26-பிப்-202103:20:11 IST Report Abuse
sankaranarayanan சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. இவன் வெளியில் இருந்தால் பாமர மக்களின் அனைவரின் மனநலம் பாதிக்கப்படும் ஆதலால் இவன் ஒருவன் மன நிலை பாதிக்கப்பட்டால் ஒன்றும் போகாது உடனே யாரையும் கேட்காமல் உள்கே தள்ளுங்கள் நல்லவர்களின் பெயரைமட்டும் வைத்துக்கொண்டு நாட்டை நாசமாக்கிவிட்டான் இனியும் தாமதமேன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X