அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக - காங்கிரசால் நல்லாட்சியை தர முடியாது: பிரதமர் மோடி தாக்கு

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
கோவை: குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக- காங்கிரசால் நல்லாட்சியை தர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் மக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கடுமையாக சாடியுள்ளார்.வளர்ச்சியை விரும்பும் மக்கள்வெற்றி வேல்... வீர வேல் எனக்கூறி பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது: தமிழக மக்களின் கண்ணிய வாழ்க்கைக்கு
பிரதமர் மோடி,  திமுக,காங்கிரஸ், தேஜ,  கூட்டணி, கோவை, மோடி, நரேந்திர மோடி

கோவை: குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக- காங்கிரசால் நல்லாட்சியை தர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் மக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கடுமையாக சாடியுள்ளார்.


வளர்ச்சியை விரும்பும் மக்கள்


வெற்றி வேல்... வீர வேல் எனக்கூறி பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது: தமிழக மக்களின் கண்ணிய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களை துவக்கி வைத்து வந்துள்ளேன். இந்தாண்டு தமிழகம் புதிய அரசை தேர்ந்தெடுக்க உள்ளது. இந்திய வரலாற்றில் இக்கட்டான நேரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மக்கள் வலிமையான செய்தியை அனுப்பினர். வளர்ச்சி அடிப்படையிலான அரசை மக்கள் விரும்புவது கடந்த இரண்டு தேர்தல்களில் வெளிப்பட்டு உள்ளது. வளர்ச்சி சார்ந்த அரசு தான் தேவை என பேச துவங்கினர். இதனால், செயல்படும் அரசு வெற்றி பெறுகின்றன. நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய விரும்புகின்றனர். வளர்ச்சிக்கான அரசியல் மற்றும் நிர்வாகத்தை மக்கள் விரும்பினர். வளர்ச்சிக்கு எதிரானவர்களை தள்ளி வைத்துள்ளனர்


சிறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம்


தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு உதாரணமாக திகழ்கிறது. மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலனுக்காக சேர்ந்து பணியாற்றினோம். கடந்த ஆட்சியின் போது, வளர்ச்சி பற்றி யார் சத்தமிடுகிறார்களோ அவர்களை மட்டுமே கவனத்தில் எடுத்து கொண்டனர். இதனால்,சிறிய வியாபாரிகள்,விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டடனர். அவர்களுக்கு பா.ஜ., அரசு முக்கியத்துவம் கொடுத்ததுசிறு குறு நிறுவனங்கள் பலன்


சிறு, குறு ,நடுத்தர தொழில் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில் துறைக்கு நிறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடன் உதவி திட்டம் நிறைய பேருக்கு சென்றடைந்துள்ளது. தமிழகத்தில் 3.5 லட்சம் சிறு குறு நிறுவங்களுக்கு 14 ஆயிரம் கோடி கடன் உதவியை வழங்கியுள்ளது. கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் பயன்பெற்று உள்ளன. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு, சிறு குறு நடுத்தர தொழிலுக்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எக்கு மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. சிறுகுறு நடுத்தர தொழில்களுடன் நான் இருக்கிறேன். இந்த தொழில் செய்பவர்கள் மூலம் தேசம் பெருமை கொள்கிறதுlatest tamil news

7 ஜவுளி பூங்காக்கள்

வலிமையான ஜவுளித்துறையை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஜவுளித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில், பெரிய முதலீடுகளுக்கான ஜவுளி பூங்காதிட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் வர உள்ளது. தோல் பொருட்கள், கைவினை பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
விவசாயிகள் வாழ்வில் மாற்றம்சிறு விவசாயிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கு பணியாற்றுகிறோம். 7 ஆண்டுகளில் சிறு விவசாயிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம். இடைத்தரகர்கள் தலையீட்டால், சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என விரும்புகிறது. விவசாயிகள் வாழ்வில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறோம். 11 கோடி விவசாயிகள் கிசான் அட்டை திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. கொப்பரைக்கான குறைந்த பட்ச ஆதார விலை 2 முறை உயர்த்தி கொடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil newsபிரதமரின் இலவச வீடு திட்டத்தின் மூலம் 12 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. தமிழக நகரங்கள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.


தொன்மையான மொழி


தமிழக பண்பாட்டில் பெருமைப்படுகிறோம். உலகின் தொன்மையான மொழி தமிழ். தமிழர் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மருத்துவம் மற்றும் அறிவியல் கல்வியை தாய்மொழியில் அளிக்க அனுமதித்து உள்ளோம். இதனால், லட்சகணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள்


மக்களுக்கு தொல்லை


தேசம், முற்றிலும் வேறுபட்ட இரண்டு அரசியலை பார்க்கிறது. ஒன்று, ஊழலுடன் கூடிய காட்டாட்சி. மற்றொன்று கருணையுடன் கூடிய ஆட்சி. திமுக - காங்கிரஸ் கூட்டங்கள் ஊழலுக்கான கணிப்பொறி திட்டங்கள் போல் உள்ளன. சுய லாபமே எதிர்க்கட்சிகளின் இலக்கு. திமுக.,வும் காங்கிரசும் ஊழலில் ஊறிய கட்சிகள். தங்களின் சட்டைப்பைகளை நிரப்பவே அவர்கள் ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக, காங்கிரசால் நல்லாட்சியை தர முடியாது.

எதிர்க்கட்சி தலைவர்கள் எப்படி கொள்ளையடிப்பது என யோசிக்கின்றனர். கொள்ளையடிப்பதற்கு சிறந்த வழி சொல்பவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் மூர்க்கத்தனமான அரசியலை கையில் எடுக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்துள்ளனர். அவர்கள் பணம் பறிக்கும் எந்தவொரு வாய்ப்புகளையும் விடுவதில்லை. இதனால், தமிழகத்தில் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஜெயலலிதாவை எப்படி திமுக நடத்தியது என்பதை உலகம் அறியும். ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு திமுகவும் காங்கிரசும் வெகுமதி அளித்தனர்
துன்புறுத்தக்கூடிய அரசியல்


திமுக ஆட்சியில் மிகப்பெரிய மின்வெட்டை மறந்திருக்க மாட்டீர்கள். ஒட்டு மொத்த தமிழகத்திற்கான கட்சி என்ற உரிமையை திமுக இழந்து விட்டது. அது பிராந்திய கட்சியாக மாறிவிட்டது. திமுகவும் காங்.,சும் அவர்களது உள்விவகாரங்களில் சிக்கி தவிக்கிறார்கள். ஊழல் செய்யவே திமுகவினர் தங்கள் மூளையை பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக ஆட்சி நடத்திய திமுக, தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை ஏற்பதில்லை. எதிர்க்கட்சியினரின் அரசியல் என்பது துன்புறுத்தக்கூடிய அரசியல். தே.ஜ., ஆட்சி என்பது கருணையுன் கூடிய ஆட்சி. தே.ஜ., கூட்டணி என்பது அனைத்து மாநில விருப்பங்களையும் தேசத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி உள்ளது. கோவையில் துவங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் தேசத்தின் வளர்ச்சிக்கு கொண்டுவரப்பட்டவை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Rajarajan - Erode,இந்தியா
26-பிப்-202117:22:24 IST Report Abuse
Sam Rajarajan பாவம் மக்கள் காறி துப்புவது ஜி-க்கு தெரியவில்லை. ஓட்டு கேட்டு வர மத்திய மாநில அரசு கூட்டணி பயம். பத்து வருடங்களுக்கு முன் நடந்த ஆட்சி பற்றி பேசி என்ன செய்வது. உங்களின் சாதனை என்று சொல்ல ஒன்றுமில்லை.
Rate this:
Cancel
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,கானா
26-பிப்-202102:34:23 IST Report Abuse
moodi masthan beembai இவர் ஆட்சி செய்யும் காலம் இந்தியாவின் இருண்ட காலம் என்று வரலாற்றில் வரும். அவ்வளவு துன்பங்கள் ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, சுங்க கட்டண கொள்ளை, ரெயில் டிக்கெட் விலை உயர்வு, தனியார்மயம், வேலைவாய்ப்பின்மை, கார்ப்பரேட் அரசியல் என்று ஒன்றா, ரெண்டா எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-202100:13:32 IST Report Abuse
Tamilan கச்சா என்னை விலை சென்ற ஆண்டு இருந்த நிலையிலேயே இருக்கும்போது, பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டது ?. அதை ஏன் பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X