பிரிட்டனில் குடியேற முயலும் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் அவதி; காரணம் என்ன?

Added : பிப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சீனாவுக்கு எதிராக போராடிவருகின்றனர். இவர்களது போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 1997-ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் தனிநாடாக செயல்பட பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்தது. அன்றிலிருந்து சீனாவால் பகுதியாகக் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காகை தற்போது தனது தேசிய பாதுகாப்புச் சட்டம்

ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சீனாவுக்கு எதிராக போராடிவருகின்றனர். இவர்களது போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.latest tamil news1997-ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் தனிநாடாக செயல்பட பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்தது. அன்றிலிருந்து சீனாவால் பகுதியாகக் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காகை தற்போது தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருகிறது.

இதனையடுத்து பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு ஹாங்காங் மக்கள் எளிதில் பிரிட்டனுக்கு குடியேற விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இது சீனாவை கொதிப்படையச் செய்தது. பொது இடங்களில் ஒன்றுகூடி போராடிவரும் ஜனநாயக ஆதரவாளர்களை பயங்கரவாதி என்ற குற்றம் சாட்டி அவர்களை சீன போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து சீன போக்குவரத்துக் காவலர் ஒருவர் கூறுகையில் கடந்த ஜூன் 2019-ஆம் ஆண்டு துவங்கி 2020-ஆம் ஆண்டுவரை 1,400 வன்முறை சம்பவங்கள் பொது இடங்களில் அரங்கேறியுள்ளன எனக் கூறியுள்ளார். போராட்ட காலங்களில் சிலர் அமைதி வழியிலும் வேறு சிலர் வன்முறையிலும் ஈடுபட்டு சீன கம்யூனிச அரசை ஹாங்காங்கிலிருந்து விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஹாங்காங்கின் எல்லையில் இருந்து சட்டவிரோதமாக பிரிட்டனில் குடியேற சில ஹாங்காங் குடிமக்கள் முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியது. சீனாவின் அராஜகப் பிடியில் வாழ்வதைக் காட்டிலும் பிரிட்டனில் குடியேறுவதை ஹாங்காங்வாசிகள் பலர் விரும்பியதால் தற்போது விசா விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

லண்டனில் உள்ள ஆடம்பரமான பகுதிகளில் பத்தில் ஓர் ஹாங்காங் குடிமகனால் மட்டுமே குடியேற முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடான பிரிட்டனில் வேலை வாய்ப்பினைப் பெற்று அங்கு நிரந்தரமாக வசிக்க பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னேறிய ஹாங்காங் வாசிகளால் மட்டுமே முடியும்.


latest tamil newsஇந்நிலையில் ஹாங்காங்கில் வாழும் ஏழை எளிய மக்கள் பிரிட்டனில் குடியேறுவது என்பது தற்போது இயலாத காரியமாகவே உள்ளது. இதனை போரிஸ் ஜான்சன் அரசு கருத்தில் கொள்ளவேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jana - Chennai,இந்தியா
26-பிப்-202104:17:28 IST Report Abuse
Jana All protest stopped since June 2020 after national security law is enforced
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-பிப்-202101:54:51 IST Report Abuse
தமிழவேல் அங்கு வாடகை அதிகம்..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-பிப்-202101:53:33 IST Report Abuse
தமிழவேல் சீனாவின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், மோடி இதைக் கண்டுகொண்டதாக ஞாபகம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X