சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 25, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்தலைவலி குறைய...ஒரு வாரத்தில் குறைந்தது 2.30 மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் வாரத்தில் குறைந்தது 2.30 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் ஒற்றைத் தலை வலி ஏற்படுவதை தடுக்கலாம் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 4500 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வாரத்தில் 2.30மணி

அறிவியல் ஆயிரம்
தலைவலி குறைய...

ஒரு வாரத்தில் குறைந்தது 2.30 மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் வாரத்தில் குறைந்தது 2.30 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் ஒற்றைத் தலை வலி ஏற்படுவதை தடுக்கலாம் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 4500 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வாரத்தில் 2.30மணி நேரம் உடற்பயிற்சி செய்யாத 73 சதவீதம் பேர் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் 5ல் ஒருவர், ஆண்களில் 15ல் ஒருவர் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்
மூன்று வகை பாலைவனம்

மிக அதிகமான பரப்பளவில் மணல், மணற்குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம். இது உலகின் மொத்த பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி. இங்கு உயிரினங்கள் வாழ்வது கடினம். பாலைவனங்கள் ஆண்டுக்கு 250 மி.மீ.-க்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி வளரும் கள்ளி, பனை போன்ற சில தாவரங்களே இங்கு வளர்கின்றன. கங்காரு, எலி, சில வகைப் பாம்பு, ஒட்டகங்கள் போன்றவை பாலை வனச்சூழலைச் சமாளித்து உயிர்வாழும் உயிரினங்கள். மழைபெறாத பாலைவனம், மலைசார்ந்த பாலைவனம், குளிர் பாலைவனம் என 3 வகைகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X